பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பெரியாழ்வார் 91) தந்தை நெடுமாறனது ஆட்சியில்- அஃதாவது அவன்மகன் பட்டம்பெற்ற கி. பி. 767-க்கு முன்பு-- பெரியாழ்வார் அவன் முன் பரத்துவநிரூபணஞ்செய்து அவனை அடிமையாக்கி யவராயின், அப்போது இளம் பருவத்தினனாயிருந்த அவன்மகன் நெடுஞ்சடையனும் அப்பெரியார் மகிமையை நேரில் அறிந்து அவர் திருவடி சம்பந்தம் பெற்றுப் பரமபாகவதனாகியிருத்தல் கூடிய தேயாம். சீவரமங்கலசாஸனத்துக் கண்ட இச்சடை.யன் பெருமைகளுள்ளே, இவன் மனு தர்சித மார்க்கத்தினால் குருசரிதங்கொண்டாடி' வருபவன் என்ற செய்தியும் ஒன்றாக உள்ளது, இங்ஙனம் அவனாற் கொண்டாடப் பெற்ற ஞானகுரு-ாபாண்டின் கொண்டாடப் பட்டர் பிரான் வந்தானென்று' என்று தனியன் கூறுமாறு: பெரியாழ்வாராகவே கொளளுதற்குப் பொருத்தம் பெரிதும் உண்டென்று சொல்லலாம். 1 இங்ஙனம் பரமவைஷ்ணவனான நெடுஞ்சடையனது செய்திகளிலே, அவன் கொங்க பூமியைத் தன் ஆட்சிக்கு உட்படுத்திய பின்“ பூஞ்சோலை யணிபுறவிற் காஞ்சிவாய்ப் பேரூர்புக்குத் திருமாலுக் கமர்ந்துறையக் குன்றமன்னதோர் கோயி லாக்கி” னான் 1, குருசரிதங் கொண்டாடி' என்பதற்குத் ' தன் முன் னோர் செயலை அநுசரித்து' என்று சிலர் பொருள் கூறுவர். 'கொண்டாடி' என்பது அவர் கருத்துக்கு அத்துணையாக இயையாமையும், 'பாண்டியன் கொண்டாட' என்ற பெரி யாழ்வார் தனியனுக்குப் பெரிதும் இயைதலும் நோக்கிக் கொள்க, கடன்ஞால முழுதளித்தலும், கண்டக சோதனை தான் செய்தலும் போலவே, தன் ஞானகுருவைக் கொண் டாடுதலும் மனுதர்சிதமார்க்கமே யாம் என்க.