பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பெரியாழ்வார் 93 அக்கொங்குநாட்டிற் பாடல் பெற்ற திவ்யதேசங் களே இல்லையென்று கருதி- கொங்குங் குடந்தையும்' என்ற தொடர்க்கு, வாசனை மயமான குடந்தையும்' என்று பதப்பொருளும் கொங்குக் குடந்தையும்' என்றிருக்க வேண்டியது கொங்குங் குடந்தையும் என்று மெலிந்தது என்று விசேடமும் பண்டை வியாக்கியானங்களில் எழுதப்பட்டுள்ளன. ஆயினும் பெரியாழ்வார் காலத்து நிகழ்ச்சிகளை நோக்குமிடத்து, அத்தொடர்க்கு மேற்கூறிய கருத்துக்கொள்ளுதலே பொருத்தமாமென்கட்ட இனி, கோநெடுமாறனைப் பற்றி ஆழ்வார் பாடிய பாசுரம் மற்றொரு குறிப்பும் உடையதுபோலவே, தோற்றுகின்றது. “ மன்னர் மறுக மைத்துனன் மார்க்கொரு தேரின்மேல் முன்னங்குச் சென்று மோழை யெழுவித் தவன்மலை கொன்னவில் கூர்வேற் கோநெடுமாறன் தென்கூடற்கோன் தென்னன்கொண் டாடுந் தென்றிரு மாலிருஞ்சோலையே என்ற அப்பாட்டில், தன் மைத்துனர்க்காகத் தேரேறிச் சென்று பகையரசரை வருத்திய அழகரது திருமலை யைக் கொண்டாடுபவன் நெடுமாறன்' என்று ஆழ்வார் கூறுதல் அறியலாம். இங்ஙனம் முன்னிரண்டடிகளிற் 1. வித்துவக்கோடு என்ற தலமும் கொங்கு நாட்டதே! அது குலசேகரப் பெருமாளைப் பற்றிக் கூறுமிடத்து விளக் கப்படும். திருக்குடந்தை, திருக்கோட்டியூர், திருப்பேர் என்ற தலங்களின் பெயர்களைக் குறிப்பிட்டது போல வன்றிக் 'கொங்கும்' என்று தேசப் பெயரால் ஆழ்வார் குறிப்பிட்டது, தங்காலத்துத் திருமால் தலமாகத் தோன்றிய பேரூரோடு, வித்துவக் கோட்டையும் கருத்துட்கொண்டு, போலும்.