பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

94 ஆழ்வார்கள் ' காலநிலை கண்ட திருமால்சரிதம், அப்பாண்டியன் வணங்குதற் கேற்றதாயமைந்த அவனது வரலாறொன்றையும் கருத்துட் கொண்டதுபோலவே தோற்றுகின்றது. இவ்வாறு ஸாபிப்ராய விசேஷண விசேஷ்யங்கள் உடையனவாகவே ஆழ்வார்கள் பாடுவதை -அவர்கள் அருளிச்செயல்களாலும் அவற்றின் வியாக்யானங் களாலும் நாம் நெடுக அறிந்து கொள்ளலாம். ஈண்டுக் கூறப்பட்ட திருமால் சரிதமும் அத்தகையதாயின், 'தன் மைத்துனர்க்காகத் தேரேறிச் சென்று பகைவரைக் கலக்கிய திருமால் கோயில் கொண்ட மலை, அதுபோன்ற செயலை முன்புரிந்த நெடுமாறனால் கொண்டாடற்குரிய தாயிற்று' என்ற தொனிப்பொருள் இப்பாசுரத்தாற் பெறப்படத் தடையில்லை. மைத்துனர்க்காகப் போர் புரிந்த பெருமானை மைத்துனர்க்காகப் போர்புரிந்த அரசன் வழிபடல் தகும் என்பது கருத்து. இங்ஙனம் நெடுமாறன் எந்த மைத்துனர்பொருட்டு எக்காலத்துப் போர்செய்தவன் என்பதைப்பற்றிச் சாஸனம் நேராக ஒன்றுங் கூறவில்லை. ஆயினும், இரண்டுவகையால் அத்தகைய செயலை அவன் நிகழ்த்தி யிருக்க இடமுண்டென்றே தோன்றுகின்றது. முதலாவது-- பல்லவமல்லனுடன் இந்நெடுமாறன் நடத்தியபோர், அப்பல்லவ குலத்தவனான சித்திரமாயன் என்பவனைப் பட்டத்தில் நிறுத்துவதற்கே என்பதும், இச்சித்திரமாயன் நெடுமாறனுக்கு அம்மான் முறை யினனாக வேண்டுமென்பதும் கனம் தூப்ராயில் துரை யவர்கள் கருத்தாகும்.! 1. 'பல்லவசரித்திரம்' -- செந்தமிழ், தொகுதி - 17, பக். 28.