பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பெரியாழ்வார் 97 மன்னரை' என்ற தொடர்க்கு-'கெடுமாறனுக்குப் பகை வரான அரசரை' என்பதே பொருளென்றும், அப்பகை யரசர் திருமாலால் நிலைகுலைக்கப்பட்ட செய்தியே இவ் ஆழ்வாராற் கூறப்படுவதென்றும் புலப்படத் தடை யில்லை . இவ்வாறன்றிப் பூர்வ வியாக்யானத்தின்படி--தன் தலையைக் குறுகி வணங்காத மன்னர்க்குத் திருமால் பிரதிகூலனாக நின்றதையே அவ்வடிகள் கூறுவன எனின், தன் திருமலையை வணங்கும் நெடுமாறனுக்கு அருள்புரிந்த திருமால், அதனை வணங்காத அடிய ராகாத பகைவரை வருத்துபவனாயினான்' என்பது கருத்தாகக் கொள்க. இது நிற்க. மேற்காட்டிய பாண்டிய வமிசாவளியில் 8-ஆம் எண்ணுக்குரிய ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன் என்பவனே பெரியாழ்வார் காலத்தவன் என்றும், சிரீவல்லுவன் அவனிபசேகரன் என்ற பெயருடையவனாகப் (புதுக் கோட்டைச் சீமைச்) சிற்றன்னவாசற் குடை வரைச் சாஸனங் கூறும் பாண்டியன் இம்மாறனே என்றும், ஸ்ரீகோபிநாதராயர் எழுதியுள்ளார்; இங்ஙனம் அவர் 1. தன் அடியரான அரசாக்கு அனுகூலனாகவும், அவர் பகைவர்க்குப் பிரதிகூலனாகவும் நின்று ஈசன் அருள் புரிபவ னென்றவாறு-"மண்ணுலகங் காவல்பூண்ட, உரிமையாற் பல்லவர்க்குத் திறைகொடா மன்ன வரை மறுக்கஞ் செய்யும், பெருமையார் புலியூர்ச் சிற்றம்பலத்தெம் பெருமானை” எனச் சுந்தரமூர்த்தி நாயனாரும், (தேவா. பக். 17, பாட்டு 4, சுவாமிநா. பதிப்பு), "கூற்றைவென் றாங்கைவர் கோக்களை யும்வென் றிருந்தழகால், வீற்றிருந்தான் பெருந்தேவியுந் தானுமோர் மீனவன்பால், ஒற்றுவந் தாருயிருண்ட திறலொற் றைச் சேவகளே” எனத் திருவாதவூரடிகளும் (திருவாசகம்) திருப்பாண்டிப் பதிகம், 10) கூறியவை ஒப்பிடற்குரியன.' 2. History of the Sri Vaishnavas. p. 23.