பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

100 ஆழ்வார்கள் காலநிலை அக்காலத்துப் பாண்டியவமிசத்தைப் பற்றிய செய்திகள் சாஸன வழியால் - மிகுதியாகத்தெரிய இடமில்லை. பிற்பட்டு வெளிவந்தவேள்விகுடி,, சின்னமனூர் முதலிய இடங்களில் அமைந்த சாஸனங் களால் அவ்வமிசத்தவர் வரலாறுகள் பல வெளிவந்தபின், பல அரிய செய்திகளும் வெளியாயின. மேலேகாட்டிய பாண்டியவமிசாவளியில் 2, 4, 6, 8 எண்களில் உள்ள அரசர்கள் மாறவர்மன், மாறன் என்ற இயற்பெயர் கொண்டிருத்தலும், பாட்டனும் பேரனு மான முறையிலே அவை வழங்கியிருத்தலும் காணலாம். 8-ம் எண்ணில் நிற்கும் ஸ்ரீ மாறனுக்கு ஸ்ரீ வல்லபன் என்பதும் பெயராகக் கூறப்பட்டுள்ளது. மாறன் என்பது போலவே ஸ்ரீவல்லபன் என்பதும் பாட்டனிடமிருந்து பேரனுக்குவந்த பெயராகக் கொள்வது பொருத்தமேயாகும். ஆயின், பெரியாழ்வார் கூறிய நெடுமாறனாகிய மாறவர்மனுக்கு ஸ்ரீவல்லபப் பெயரும் உண்டென்று, அவன்பேரன் பெயர்வழக்கி னின்று நாம் கொள்ளக் கூடியதன்றோ? இவ்வாறன்றி, 7 எண்ணிற்கண்ட பரமவைஷ்ண வனான நெடுஞ்சடையனுக்கே ஸ்ரீவல்லபப்பெயர் உரிய தாகவேண்டும் என்று ஸ்ரீமாந்கோபிநாதராயர் கருதினர்.! இக்கருத்தும் பொருத்தமுடையதேயாகும்." 1. T. A. S. Vol, I, p. 189. 2, ஹரிவம்சம் என்ற ஜைனகிரந்தம் இயற்றிய ஜினஸேனர் என்பார். இந்திராயுதன் என்ற இரட்ட வேந்தன் வடநாட்டையும், ஸ்ரீவல்லபன் என்பான் தென் னாட்டையும் ஆண்டுவந்த காலத்தே சகாப்தம் 705 (கி. பி, 783)ல் தம் நூலை எழுதி முடித்ததாகக் கூறுகின்றார், வல்லபர் என்பது இரட்டரும் சளுக்கரும் கொண்ட தாயினும் அஃது அவர்களெல்லார்க்கும் வழங்கும் பொதுப்