பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

102 ஆழ்வார்கள் காலநிலை தெளிய இடமில்லை. ஆயினும், அப்பாண்டியனது 17-ம் ஆட்சி வருஷத்தில் அமைந்த சீவரமங்கலசாஸனத்தால், 784-ல் அவன் சீவந்தனாயிருந்தவன் என்பது அறியப்படு கின்றது. பெரியாழ்வார் 775-வரை எழுந்தருளியிருந்தவ ராயின், மேலே குறித்த பாண்டிய வமிசாவளியில் 5-ம் எண்ணுக்குரிய கோச்சடையன் (உத்தேசம் 690) கால முதலாக, 7-ம் எண்ணுக்குரிய அவன் பேரன் நெடுஞ் சடையனது ஆட்சியிடைக் காலமான 775-வரை, மூவர் பாண்டியர்காலங்களில் இப்பெரியார் விளங்கியிருந்தவ ரென்றே முடிவு கூறலாம். 5-ஆம் அதிகாரம் ஸ்ரீ கோதையார். பெரியாழ்வாராகிய ஸ்ரீவிஷ்ணுசித்தரின் திரு மகளாரைப்பற்றி இனிக் கூறுவேன். பின்பழகியபெருமாள்ஜீயர் குருபரம்பரை முதலிய வற்றிற்கண்ட அத்திருமகளாரின் வைபவச் சுருக்கம் அடியில்வருமாறு: பெரியாழ்வாரால் திருமாலைக் கைங்கரியத்துக் கென்று வில்லிபுத்தூரில் அமைக்கப்பட்டு வந்த திருநந்த வனத்துள் துளஸிவனத்திடையே அழகிய பெண்மக