பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஸ்ரீ கோதையார் 103 வொன்று அப்பெரியாராற் கண்டெடுக்கப் பெற்றது. அதனைத் தம் மகளாராகவே ஆழ்வார் கைக்கொண்டு கோதை என்ற திருநாமஞ்சூட்டிச் சீராட்டிப் பாராட்டி வளர்த்து வர, அப்பெண்கொடி வளர்ந்து வந்தனள். இளமையிலே கலைகள் முழுதுந் தன்னடைவே நிரம்பப்பெற்று வளர்ந்த கோதையார், ஆழ்வார் திருமகளார் என்றதற்கேற்றபடி ஞானபரிபூர்ணராகவும், திருமால்பாற் காதல்மிகப்பெற்றவராகவும் விளங்கிய தோடு, அப்பெருங்காதலடியாகப் பெருமானையே தமக்குரிய நாயகனாக வரித்து 'அவனை விட்டகன் மாற்றகில்லா' நிலையுடையராயினார், இங்ஙனம் நிகழப் பெரியாழ்வார், தாம் வழிபடுந் திருமாலுக்கென்று நாளுக் தொடுத்துவைத்த திருமாலைகளை அவரில்லாக் காலத்தே அவரறியாமல் தங்குழலிற் சூடிக்கொண்டு என்னு டைய அழகு எம்பெருமான் ஏற்கக் கூடியதாகுமோ' என்று கண்ணாடியில் அழகுபார்த்து அகங்களித்து, தம திருத்தந்தையார் வருமுன்பே சூடிய திருமாலைகளைக் களைந்து முன்போற் சுருட்டி உரிய விடத்தில் வைத்து வர, ஆழ்வாரும் அஃதறியாதே அத்திருமாலைகளைப் பெருமானுக்கு ஸமர்ப்பித்துக் கொண்டு வந்தனர். ஒருமாள், ஆழ்வார் தாம் கட்டிய திருப்பள்ளித் தாமத்தில் நீண்ட மயிரொன்றிருத்தல் கண்டு அஞ்சி, அதுவந்த காரணத்தை உசாவியறிந்து தம் திருமகளா ரைக் கடிந்தவராய், அத்திருத்தாமம் பெருமானுக்கேற் காதது என்று ஸமர்ப்பிக்காமற் போயினர். போக, அன்றிரவு திருமால் அவர் கனவில்தோன்றி, வழக்கம் போல் மாலை சாத்தாத காரணத்தை உசாவ, ஆழ்வார் தம்மகளது அறியாமைச் செயலைக் கூற, அத்தகைய சூடிக்கொடுத்த தூமலர்த்தாமமன்றிப் பிறிதெதுவும்