பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

104 ஆழ்வார்கள் காலநிலை தமக்குப் பிரிய மற்றதாம்' என்று பெருமான் அருளிச் செய்யவும், பெருவியப்பும் உவப்பு மடைந்து, பின்னை கொல் நிலமா மகள் கொல் திருமகள் கொல் பிறந்திட் டாள் என்று தம் திருமகளார் பால் விசேடப் பிரதி பத்தி பண்ணி , அடுத்த நாள் முதலாகத் தம் திருமகள் சூடிய திருமாலைகளையே நாளும் சாத்திப் பெருமானை உவப்பித்து வரலாயினர். அதுமுதல் 'சூடிக்கொடுத்தாள்' என்ற திருநாமம் கோதையார்க்கு வழங்குவதாயிற்று. பின்னர், உரிய பக்குவம் வந்ததும் தம் திருமக ளார்க்குத் திருமணம்புரிய விரும்பித் தக்க வரன் தேடப் புகவும்-திருவரங்கத்துப் பெருமானான அழகிய மணவாளனையன்றி மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன்", என்று மறுத்து நின்ற இவரது வைராக்கிய மிகுதியைக் கண்டு பெருங்கவலையுற்ற ஆழ்வார் கனவிலே திருவரங்கச் செல்வர் தோன்றி-- தாம் நேரே கைப்பற்றிக் கொள்ளுமாறு தம் கோயிற் றிரு முற்றத்திற்கு அவர் தம் திருமகளை அழைத்து வரும்படி அவர்க்கு ஆஞ்ஞாபித்து மறைந்தருளினர். ஆழ்வாரும் பேருவகை பூத்து, அத்திருவாணைப்படியே கோதையாரைப் பரிவாரங்களுடன் மணக்கோலமாகத் திருவரங்கப் பெருநகர்க்கு அழைத்துக் கொண்டு சென்று அழகிய மணவாளன் திருமுன்பு நிறுத்த, அவ் வெம்பெருமானும் வரவேற்று ஆழ்வார் திருமகளாரைப் பெரு விருப்புடன் அங்கீகரித்தருளித் தன்னுள் ஐக்கிய மாக்கிக் கொண்டருளினன். இவ்வரிய நிகழ்ச்சிக்குப் பின் பெரியாழ்வார் தம்மூரேற எழுந்தருளித் தம் அருமைப் பெண் கொடி யின் பெரும் பிரிவுக்கு ஆற்றாது வருந்தினராயினும் பெருமான் அவளைப் பேணிக் கொண்டருளியதற்கு