பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/115

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

1051 ஸ்ரீ கோதையார் உவந்து, முன்போல் திருமால் கைங்கரியங்களைப் புரிந்து வந்தனர் என்பதே. இனி, திவ்யசூரி சரிதம் கூறும் இப்பெரியார் வைப் வத்துள் அவர் திருமண வரலாறுகளாக உள்ளவை முழுதும் ஏனைய குருபரம்பரைகளிற் காணப்படா தனவும், அரியசெய்தி பல கொண்டனவுமாகும். அந் நூலின் 12-ம் அத்தியாயத் தொடக்கத்திற் கூறப் படுவன வருமாறு: “இப்படியிருக்கும்போது, விதவானான ஸ்ரீவிஷ்ணுசித்தர் தம் புத்திரியின் யௌவனதசையையும் அவளுக்கு எம்பெரு மானிடத்துள்ள அநுராகத்தையும் நன்றாய் ஆலோசித்துப் பார்த்து, ஸர்வேசுவரனான பகவானுக்கே அவளைப் பாணிக் கிரகணம் பண்ணிக் கொடுக்கவேண்டும் என்று எண்ணிக் கொண்டு, பெரியவரான ஸ்ரீ சடகோபரின் அனுமதியின்படி அவர் திருமுன்பே ஸ்ரீ கோதையின் பாணிக்கிரகண மஹோத்ஸவத்தை நடத்த வேண்டும் என்ற திருவுள்ள முடையராய், பாண்டிய தேசாதிபதியான வல்லபதேவன் என்னும் பெயருடைய தம் சிஷ்யனுடனும் புத்திரி கோதையுடனும் குருகை நகரத்தை யடைந்து, அவ்விடத் தில் ஜ்யேஷ்டராய் எழுந்தருளியிருக்கின்ற வகுளாபரணரின் திருவடிகளில் சந்தோஷத்துடன் அம்மூவரும் தண்டன் ஸமர்ப் பித்தனர். உடனே வகுளா பரணரும் கருணைக் கடலாகிய தமது கண்களால் ஸ்ரீ கோதையைக் கடாக்ஷத்தனர். பின்பு வகுளாபரணர் தாம் திருவாய்மலர்ந்தருளிய திராவிடஸுக்தி நிபந்தனத்தைக் கேட்பதில் ஆசையுள்ளவர் களாய் அங்குவந்து, உறங்காப்புளிக் கொம்புகளின் நடுவில் வீற்றிருக்கின்றவர்களான அர்ச்சாவதார எம்பெருமான் களையும் பிரமேந்திராதிதேவர் குழாத்தையும் கண்டனர். பின்பு அவ்வகுளாபரணரிடத்தில் வந்திருக்கும் பொய்கையார், பூதத்தார், பேயார், பக்திசாரர், தொண்டரடிப் பொடிகள் குலசேகரர், மதுரகவிகள் என்ற இவர்களிடஞ்சென்று,