பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/116

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

106 ஆழ்வார்கள் காலநிலை அவர்கள் ஒருவர்க்கொருவர் செய்து கொள்ளும் வந்தன மகோத்ஸவத்தைக் கண்டு களித்தனர். வகுளாபரணரைக் கண்டதும் பொய்கைமுதலிய பக்தர் கள் பராங்குசருடைய பாதாரவிந்தங்களில் பக்தியுடன் வீழ்ந்து வணங்கி, அப்பராங்குசர் அருளிச் செய்த திவ்யப் பிரபந்தங்கள் நான்கையும் கேட்டபின், தாங்கள் செய்த ருளிய பிரபந்தங்களையும் ஸ்ரீ பராங்குசாரிடம் விண்ணப்பஞ் செய்து கொண்டனர், "பின்பு, சடகோபர், பொய்கையார்முதலிய பக்தகணங் களுடன் ஸ்ரீகோதை திருவாய் மலர்ந்தருளிய ரஸபரிதமான இரண்டு பிரபந்தங்களையும் கேட்டுவிட்டு ஸ்ரீ கோதையின் யௌவன தசையையும் அவளது தீன தசையையும் அவள் எம்பெருமானிடத்தில் ஈடுபட்டிருப்பதையும் கண்டானந் தித்தனர். உடனே சடகோபர் சுயம்வரம் அமைத்து கோதையை அர்ச்சாவதார எம்பெருமான்களிற் சிறந்த வரனுக்கே விவாகஞ் செய்து கொடுக்கவேண்டும் என்ற எண்ணத்துடன் சுயம்வரங்கோடிக்கும் பொருட்டு வல்லப ராஜனையும் மதுரகவிகளையும் நியமித்தனர்." எனக் கண்டு கொள்க. இங்ஙனம் நிகழ்ந்த சுயம்வரத்தில், கோதை திருவரங்கச்செல்வரான அழகியமணவாளனையே தன் நாயகனாகவரித்துத் திருமணம் புரிந்ததும், அம்மண வாளனுடன் கோதை மணக்கோலமாகத் திருவரங்கம் நோக்கிப் பரிவாரங்கள் சூழச் செல்லும் இடைவழியிலே, களவுத்தொழிலில் முனைந்துநின்ற திருமங்கை மன்னன் அவர்களை வழிமறித்துநின்று தம் வாள்வலியால் மந்திரோபதேசம் பெற்றதுமாகிய செய்திகள் மேற்படி திவ்யசூரிசரிதத்தில் காவியமுறைக்கேற்பப் பலபடப் புனைந்தும் விரிவாகவும் கூறப்பட்டுள்ளன. இவையே