பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/117

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஸ்ரீ கோதையார் 107 சூடிக் கொடுத்த சுடர்க்கொடியைப் பற்றி முன்னூல் களிற் கண்ட சரித்திரச்சுருக்கமாகும். கோதா என்பது வாக்கை உதவுபவள் என்னும் பொருள்படுவதாம்.! (பெரியாழ்வார்) தம் குழந்தை எம்பெருமான் விஷயத்தில் வாக்கைச் செலவிடப் போகிறாள் என்று நினைத்தே அதற்கிசைந்தபடி தம் பெண்ணுக்குப் டெயரிட்டனரோ என்று உலகம் நினைக்குமாறு நல்ல சுபமுகூர்த்தத்தில் கோதா என்று பெயரிட்டனர்” என்று திவ்யசூரிசரிதம் கூறுவதும் அறியத்தக்கது. கோதைப்பிராட்டிக்கு ஆண்டாள், நாய்ச்சியார் என்ற திருநாமங்களும் பிரபலமாக வழங்கின. இப்பெரி யாள் இயற்றியருளிய திவ்யப் பிரபந்தங்கள்--திருப் பாவையும்' நாய்ச்சியார் திருமொழியுமாகும். இவை, பெரியாழ்வார் திருமொழியையடுத்து நாலாயிர திவ்யப் பிரபந்தத்துள் அமைக்கப்பட்டுள்ளன, ஆண்டாளது இவ்வருளிச்செயல்களைக் கொண்டு ஆராய்ச்சி செய்யுமிடத்து மிகவும் அழகியசெய்திகள் சில வெளியாகின்றன. இப்பெரியாரது திருமொழியில் உள்ள நூற்று நாற்பத்து மூன்று பாசுரங்களிலும் திருமாலையே தமக்குரிய மணவாளனாக வரித்துக் கொண்டு அப்பெருமானிடங் காட்டும் இவரது பிரேமைப் பெருக்குத்ததும்பிநிற்பதைக் காணலாம். ஆண்பாலரான மற்றை ஆழ்வார்களும் தம்மை நாயகியராகவும் திருமாலை நாயகனாகவுங்கொண்டு 1. கோதா என்பது சாமவேத சாகையொனறன் ஆசிரியரான பெண்பாலார் ஒருவர்க்குப் பெயராயுள்ள மையும் குறிப்பிடத்தக்கது. (Sir Monier William's Sanskrit - English Dictionary, p. 368)