பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/118

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

108 ஆழ்வார்கள் காலநிலை பாடிப் போந்தனராயினும், அவர்கள் கொண்ட நாயக நாயகீபாவம் அநுகாரமேயாதலின் இயற்கையானதன்று என்றும், அதனால் அன்னோர் திருமாலிடஞ் செலுத்திய அன்பு மேட்டுமடைநீர்போன்றதென்றும், ஒன்றையும் அங்கரியாமல் பெண்பாலராய்ப் பிறந்து அழகியமண வாளனையே தம் நாயகனாக வரித்துக்கொண்டு அவனிடம் உள்ளுருகிச் செலுத்தும் இவரது இயற்கைக் காதற்பெருவெள்ளம் பள்ளமடைநீர்போன்றதென்றும் பெரியோர்கள் எழுதிய கருத்து ஈண்டு அறியத்தக்கது. திருமாலை அடையவேண்டித் தைமாதந்தொடங்கிப் பங்குனிவரை காமதேவனைக்குறித்துத் தாம் நோற்கும் நோன்பைப் பற்றி விரிக்குமிடத்தே இப்பிராட்டியார் வானிடை வாழுமவ் வானவர்க் கென்று மறையவர் வேள்வியில் வகுத்தவவி கானிடைத் திரிவதோர் நரிபுகுந்து கடப்பது மோப்பதுஞ் செய்வதொப்ப ஊனிடை யாழிசங் குத்தமர்க்கென் அன்னித் தெழுந்தவென் தடமுலைகள் மானிடவர்க் கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே தொழுதுமுப் போதுமுன் னடிவணங்கித் தூமலர் தூய்த்தொழு தேத்துகின்றேன் பழுதின்றிப் பாற்கடல் வண்ணனுக்கே பணிசெய்து வாழப் பெறாவிடில் நான் அழுதழு தலமந் தம்மா வழங்க ஆற்றவு மஃதுனக் குறைக்குங் கண்டாய் உழுவதோ ரெருத்தினை நுகங்கொடு பாய்த்து ஊட்டமின் றித்துரந் தாலொக்குமே"