பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

110 ஆழ்வார்கள் காலநிலை " பதுமா பதியெனும் பைந்தொடிக் கோமகள் கன்னி யாயந் துன்னுபு சூழ மதிற்புறங் கவைஇய புதுப்பூங் காவின் மகர வெல்கொடி மகிழ்கணைக் காமற்கு நகரங் கொண்ட நாளணி விழவினுள் எழுநா டோறுங் கழுமிய காதலொடு வழிபா டாற்றிய போதரு மின்றென " (பெருங்கதை 3, 5, 27-33). என்றபடி, பதுமாபதி என்னும் பெண்மணி உதயனனை அடைய விரும்பிக் காமனை நோற்றவரலாறும் முன்னூல் களால் அறியலாம். இம்முறையே, நம் கோதையார் தாம் நோற்ற நோன்பைக் கூறுமிடத்தும், "மதுராபதிக் கொற்றவன் வரிற் கூடிடு கூடலே" என்று கூட லிழைத்துக் குறியறியுமிடத்தும், மாயவன்றன்னை மணஞ்செயக் கண்ட. தூயநற் கனவைத் தோழிக்கு உரைக்குமிடத்தும், மற்றும் அவன் பாலசரிதங்களில் ஈடுபட்ட விடத்தும் பாடிய பாசுரங்களும், எம்பெருமான் தமக்கு உரியகாலத்தே வந்தருளாமையால்* ஒளிவண்ணம் வளை சிந்தை யுறக்கத்தோ டிவையெல்லாம் எளிமையா விட்டென்னை யீடழியப் போயினவால் குளிரருவி வேங்கடத்தென் கோவிந்தன் குணம்பாடி அளியத்த மேகங்காள் ஆவிகாத் திருப்பேனே +2 கோங்கல ரும்பொழில் மாலிருஞ் சோலையிற் கொன்றைகண்மேல் தூங்குபொன் மாலைக ளோடுட னாய்நின்று தூங்குகின்றேன் 1. இப்பாசுரத்தின் முன்னிரண்டடிக்கும் "கொன்றை மாலை பாகையாலே அழகர்க்கு ஆகாது; அது தான் திருமலை யில் உள்ளதாகையாலே சைவர்கள் புகுந்து பறித்துக்