பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஸ்ரீ கோதையார் பூங்கொள் திருமுகத்தின் மடுத்தூதிய சங்கொலியும் சார்ங்கவில் நாணொலியுந் தலைப்பெய்வதெஞ் ஞான்றுகொலோ." என்றிவ்வாறு தாம்படுகின்ற துன்பநிலைகளைக் கூறும் பாசுரங்களும், பெருமானிடத்தில் இவர் மேரே கொண் டிருந்த கரைபுரண்ட காதற் பெருக்கைக் காட்டக் கூடியன. தம் திருமகளாரின் இத்தகைய மனநிலையை நோக் கியே பெரியாழ்வாரும் கொள்ளார்கள்; ஆக இரண்டிடத்துக்கும் ஆகாதே கிடந்து நாலுமாடோலே, தம்மோட்டை ஸம்பந்தமே ஏதுவாகப் பந்துக்களுக்கும் ஆகாதே, தாமும் அங்கீகரிக்கப் பெறாதே, நடுவே நின்று தடுமாறு நின்றேன் (ஈடு, 6, 7, 6 ஜீயரரும் பதம்) என்றும், பின்னிரண்டடிக்கும்-"இரண்டவதாரத்தில் இரண்டு பிராட்டிமார்க்கு உதவினது தனக்கொருத்திக்குமே வேண் டும்படி ஆய்த்து', இவள் (ஆண்டாள்) தசை. சிசுபாலன் ஸ்வயம் வரார்த்தமாக வந்து தன்னைக் கைப்பற்ற) ஒருப்பட்ட சமயத்திலே புறச்சோலையிலே (சண்ணனது) ஸ்ரீபாஞ்சஜந்யகோஷமானது வந்து செவிப் பட்டுத் தரிப்பித்தது ருக்மிணிப் பிராட்டியை. இராவணன் மாயா சிரஸ்ஸைக் காட்டினபோது (இராம பிரானது) ஸ்ரீ சார்ங்கத்தின் ஜ்யாகோஷம் (நாணொலி ) ஆனது வந்து செவிப்பட்டுத் தரிப்பித்தது ஸ்ரீ ஜனகராஜன் திருமகளை. இரண்டவதாரங்களில் உள்ளவையும் சேர மடுத்தொவிக் கும்படி வேண்டும்படி ஆய்த்து இவள் விடாய்; அவர்கள் அளவல்ல வாயிற்று இவளது ஆற்றாமை" (பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானம்) என்றும் எழுதிய பெரியோர்களின் உரை நயங்கள் ஈண்டு அறிந்து மகிழத்தக்கன.