பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஸ்ரீ கோதையார் 113 " நல்லவென் தோழி! நாகணைமிசை நம்பரர் செல்வர் பெரியர் சிறுமானிடவர்நாஞ் செய்வதென் வில்லி புதுவைநகர் விட்டுசித்தர் தங்கள் தேவரை வல்லபரிசு வருவிப்பரேல் அது காண்டுமே. (ஷ, 10, 10.) " செம்மை யுடைய திருவரங்கர் தாம்பணித்த மெய்ம்மைப் பெருவார்த்தை விட்டுசித்தர் கேட்டிருப்பர் தம்மை யுகப்பாரைத் தாமுகப்பா ரென்னுஞ்சொல் தம்மிடையே பொய்யானாற் சாதிப்பா ராரினியே" (11, 10.) என்பனவற்றால், தம்மிடமும் தந்தையாரிடமும் திருவரங் கப்பெருஞ் செல்வர் தம்மைக் கைக்கொள்வதாக மெய்ம் மைப் பெருவார்த்தை கூறியிருப்பதையும், அவ்வாறு கூறியதையும் மறந்து இதுவரை தம்மைக் கொண்டரு ளாமையால் அப்பெருமான் திருவாக்கும் பொய்ப் படு வதையும், பெருந் தெய்வமாகிய அவர் சிறுமானிட ராகிய தம்மைப் பொருட்படுத்தாமற் போயினும், தம் மெய்யடியாரும் மெய்ந்நாவருமாகிய தந்தை விஷ்ணு சித்தரை அவர் புறக்கணிக்க முடியாதாதலின், அவர் வாயிலாக அவ்வழகிய மணவாளனைத் தாம் அடைவது திண்ண மென்பதையும் கூறியிரங்குதல் அறியத் தக்கது. இதனால், பெருமானைக் கட்டுப்படுத்தற்குத் தமது பரமபத்தியாகிய பாசத்தளை மட்டுமன்றித் தம் திருத்தந்தையாரின் புருஷகார பலமும் ஆண்டாளுக்குப் பேருதவி புரிவதாயிற்று என்பது நன்கு தெரியலாம், ஆகவே, பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்மணி யான இவர், எவ்வகையும் பெருமானால் உவந்து அணி தற்குரிய பேரணிகலமாயினர் என்க. திருவரங்கப் பெருமானார் தம் திருமுன்பு வரவழைத்து அத்திருமக ளாரை விரும்பிக் கைக் கொண்டருளிய பின்பு, விஷ்ணு