பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

114 ஆழ்வார்கள் காலநிலை சித்தர் தம் அருமைப் பெண்ண முதின் பிரிவுவருத்த ஆற்றாமல்“ நல்லதோர் தாமரைப்பொய்கை நாண்மலர்மேற் பனிசோர அல்லியுந் தாது முதிர்ந்திட் டழகழிந்தா லொத்ததாலோ! இல்லம் வெறியோடிற்றாலோ! என்மகளை எங்குங்காணேன்! மல்லரை யட்டவன் பின்போய் மதுரைப்புறம் புக்காள் கொல்லோ! 14 ஒருமகள் தன்னையுடையேன் உலகம் நிறைந்த புகழால் திருமகள் போலவளர்த்தேன் செங்கண்மால்தான் கொண்டுபோனாள்" “ வேடர் மறக்குலம்போல வேண்டிற்றுச் செய்தென்மகளைக் கூடிய கூட்டமேயாகக் கொண்டுகுடி வாழுங்கொலோ நாடும் நகருமறிய நல்லதோர் கண்ணாலஞ்செய்து சாடிறப் பாய்ந்தபெருமான் தக்கவாகைப் பற்றுங்கொலோ" “ அண்டத் தமரர்பெருமா னாழியான் இன்றென்மகளைப் பண்டப் பழிப்புக்கள் சொல்லிப் பரிசற ஆண்டிருங் கொல்லோ" (பெரியாழ்) திருமொழி, 3, 8. என்றிவ்வாறு பலபடியாகவும் புலம்புகின்ற பாசுரங்கள் எல்லா வுள்ளங்களையும் ஒருங்கே உருக்கக் கூடியன. ஆழ்வார் திருமகளார் தமமைக் கண்ணனுகந்த கோபியருள் ஒருவராகவே அநுகரித்துக் கொண்டு காதல் பெருக்கிப் போந்தவராதலின், அவரை அத் தகையராகவே கருதி ஆயர்குலத்துத் தாயர்கூற்றாக அவர் திருத்தமப்பனார் இங்ஙனம் பாடியது ஏற்புடைத் தாதல் காண்க. ப்ராஹ்மணோத்தமரான பெரியாழ் வாருந் திருமகளாரும் கோபஜன்மத்தை ஆஸ்தானம்