பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஸ்ரீ கோதையார் 117 4 புள்ளின்வாய் கீண்டானைப் பொல்லா வரக்கனைப் கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்க் பிள்ளைக ளெல்லாரும் பாவைக் களம்புக்கார் வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்றுப் புள்ளுஞ் சிலம்பின்காண் போதரிக் கண்ணினாய்! குள்ளக் குளிரக் குடைந்து நீ ராடாதே பள்ளிக் கிடத்தியோ பாவாய்நீ நன்னாளால் கள்ளந் தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்' எனக்காண்க. “உடனொத்த கன்னியரெல்லாம் மார்கழி நீராடுதற்குரிய களத்தை அடைந்து விட்டனா; வெள்ளி எழுந்து வியாழனும் உறங்கியது; புட்களும் சத்திக்கலாயின; இங்ஙனமாகவும், இன்னும் இந்த நன்னாளில் பள்ளியிற் கிடக்கலாமோ? பெண்ணே ! துயிலெழுந்து எம்முடன் வருக - என்பது இதன் கருத்து. திருப்பாவை முதற் பாட்டில்"மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால் நீராடப் போதுவீர் போதுமினோ" என்ற ஆண்டாள் தொடங்குதலால், மார்கழி மாதத்தே மதிநிறைந்த நாளான பௌர்ணிமையன்று அதிகாலையில் அத்திருநாளின் நீராட்டம் நடைபெறுவ தென்பது பெறப்படும். சங்கப்புலவராகிய நல்லந் துவனாரும்.Irஞாயிறு காயா நளிமாரிப் பிற்குளத்து மாயிருந் திங்கள் மறுநிறை யாதிரை அம்பா வாடலி னாய்தொடிக் கன்னியர் முனித்துறை முதல்வியர் முறைமை காட்டப் பனிப்புலர் பாடி" (பரிபாடல், 11.) 1. ஞாயிறு தெறாத கடைமாரியையுடைய மார்கழி மாதத்துத் திங்கள் மறுவொடு நிறைந்த திருவாதிரைலாளின்