பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முன்னுரை தலைமை மாணாக்கராகச் சொல்லப்படும் ஆசிரியர் தொல் காப்பியனார், அந்நான்கு நிலங்களையும் அவற்றுக்குரிய தெய்வங்களுடன் வைத்துப் பாகுபடுக்கு மிடத்தே " மாயோன் மேய காடுறை யுலகமும் சேயோன் மேய மைவரை யுலகமும் வேந்தன் மேய தீம்புன லுலகமும் வருணன் மேய பெருமண லுலகமும் முல்லை குறிஞ்சி மருத நெய்தலெனச் சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே. (பொருளதி. அகத்திணை, 5.) என்று கூறுகின்றார். இதனால், மாயோனாகிய திருமால் - முல்லை என்ற காடும் காட்டுச்சார்புமான நிலத்திற்கும், சேயோனாகிய முருகன்- குறிஞ்சி என்ற மலையும் மலைச் சார்புமான நிலத்திற்கும், வேந்தனாகிய இந்திரன்மருதம் என்ற ஊரும் ஊர்ச்சார்புமான நிலத்துக்கும், வருணன்-நெய்தலாகிய கடலும் கடற்சார்புமான நிலத்துக்கும் உரிமைபூண்ட தெய்வங்களென்பதும், அத்தெய்வவழிபாடுகள் தொல்காப்பியர்க்கு மிகவும் முற்பட்ட காலத்திலேயே தமிழ் மக்களாற் கைக்கொள் ளப்பட்டவை என்பதும் நன்கு விளங்கும். இந்நான்கு நிலங்களோடு முல்லையுங் குறிஞ்சியு முறைமையிற் றிரிந்து-நல்லியல் பழிந்து' பாலையை ஐந்தாநிலமாகக் கொண்டு, அதற்குக் கொற்றவையைத் தேவதையாகக் கூறுவர், பிற்பட்ட, ஆசிரியர்.. இத்தெய்வங்களுள்ளே, இந்திர வருணர்களுக்கு அவ்வவர் நிலவுரிமை பற்றியமைந்த தனிக் கோயில்

  • 1. தொல்காப்பியம், அகத்திணை, 34)-'இளமபூரணருரை,