பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

121) ஸ்ரீ கோதையார் காலத்து நிகழ்ந்த ஒரு விசே. சம்பவமே என்று கொள்ளத் தடையுண்டோ ? ஆகவே மார்கழித்திங்கள் மதி நிறைந்த நன்னாளின் நீராட்டத்துக்காக வைகறைக்கு முன்பே துயிலெழுந்து நக்ஷத்திர கிரகங்களின் சஞ்சாரங்களைக் கண்டு நாழிகை அறியப்போந்த நிலையில், வெள்ளியின் எழுச்சியும் வியாழனது வீழ்ச்சியும் ஒருங்கு நிகழ்ந்திருப்பதை நேரிற்பார்த்து இவ்வாறு பாடலாயினர், அங்கல்லிசைப் புலமை மெல்லியலடியார் என்பது நன்கு பெறப்படும். பாண்டியன்கொண்டாடிய பட்டர்பிரான் திரு மகளார் என்று தம் பதிகங்களிற் கூறிக்கொள்வதற் கேற்ப இளமையிலே கலைகள் நிரம்பிய நாவின்கிழத்தி நம் கோதையார் என்பதும், உயர்வுாவிற்சியின்றி உள்ளதை உள்ளபடியேபாடும் உத்தமகவியென்பதும் அவர் திருவாக்குக்களால் தெளிய அறியப்பட்டவை, திருப்பாவைப் பாசுரத்திற்கண்ட, வெள்ளி வியாழங் களின் உதயாஸ்தமனங்கள், வானநிலையை நேரிற் கண்டு அப்பெரியாராற் கூறப்பட்ட தொரு விசேட நிகழ்ச்சியே என்பதிற் சிறிதும் ஐயமில்லை. இனி 'வெள்ளியெழுந்து வியாழமுறங்கிற்று' என்பதில் எழுந்து என்பது, கோழிகூவிப்பொழுது புலர்ந்தது' என்பதிற்போல உடனிகழ்ச்சிப் பொருளில் திரிந்துவந்தசெயவெனெச்சம் என்பது தெரியலாம். கோழிகூவுதல் பொழுதுபுலர்தற்குக் காரணம் அன்று: அது, பொழுதுபுலர் தலால் ஆகிய காரியமும் அன்று. மற்று, கோழிகூவுதலும் பொழுதுபுலர்தலும் ஒரு சேர நிகழ்ந்தன என்பதே கருத்தாம். அதுபோல இத்தொடரும், வெள்ளியெழுதலும் வியாழ முறங்கு தலும் உடனிகழ்ந்தன என்ற பொருளே பயக்கும் என்க.