பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

122 ஆழ்வார்கள் காலநிலை அஃதாவது-கீழ்த்திசை யடிவானத்தே சுக்கிரன் மக்கள்கண்ணுக்குப் புலப்படும்படி உதயமானவளவில், மேற்றிசையடிவானத்துக் கண்ணுக்குப் புலப்பட்டிருந்த வியாழன் அஸ்தமிக்கலாயிற்று என்பதாம். வியாழனுறங்கிச் சில நாழிகைகள்கழித்து வெள்ளி எழினும், வியாழன் உறங்குவதற்குச் சில நாழிகை களிருக்க வெள்ளி எழினும் அவை உடனிகழ்ச்சி ஆகா என்க . அவ்வுதயாஸ்தமனங்கள் உடனிகழ்வனவாயின், கீழ்த்திசை மேற்றிசை அடிவானங்களில் இருக்கும் வெள்ளி வியாழங்களுக்கு இடைப்பட்ட தூரவளவு 180பாகை (degree| ஆகும். சிறிது முன்னும்பின்னுமாக அவற்றின் உதயாஸ்தமனங்கள் நிகழ்ந்தனவாகக் கொண்டாலும் அந்தத் தூரவளவு 165-க்குக் கீழும் 185-க்கு மேலும் ஒருபோதும் போகா. போகுமாயின், சுக்கிரன் எழும்போது வியாழன் அஸ்தமித்துப் பல நாழி கைகள் சென்றதாகவேனும், சுக்கிரோதயத்தில் 1. மழைபெய்ய நெல்விளைந்தது' என்முற் போலக் காரணப்பொருளிலேனும், 'நெல்விளைய மழைபெய்தது' என்றாற்போலக் காரியப் பொருளிலேனும், கோழிகூவப் பொழுது புலர்ந்தது' என்றாற்போல உடனிகழ்ச்சிப் பொரு ளிலேனுமன்றி, வேறுவகையில் செயவெனெச்சம் வாரா தென்பதும், ஈண்டு வெள்ளியெழுந்து வியாழமுறங்கிற்று' என்பதனுள், எழுத்து என்ற வினையெச்சம் வினை முதல் வினையையன்றிப் பிறவினை கொண்டு முடித்திருத்தல் வழுவா தலின், வெள்ளியெழ எனச்செயவெனெச்சமாக அதனைத் திரித்தலே முறையாமென்பதும், அம்முறையில் அதற்கு உடனிகழ்ச்சியன்றி வேறு பொருள் அமையாமையும் கண்டு கொள்க,