பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஸ்ரீ கோதையார் 123 வியாழன் அஸ்தமிக்கப் பல நாழிகைகள் செல்லக்கூடிய தாகவேனும் இருக்குமேயன்றி அவ்வுதயாஸ்தமனங்கள் ஒருசேரநிகழ்வன ஆகா. ஆதலின் 'வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிற்று' என்று ஆண்டாள் பாடுவதற்கு, இடமே இல்லையாம், இவ்வாறு ஒருவருங் கூறாத முறையில், வெள்ளி வியாழங்களின் உதயாஸ்தமனங்களை ஒருசேரவைத்துக் கோதையார் கூறுதலால், அவை பெரியாழ்வார்கால மாக ேேல நான் விரிவாக விளக்கிப் போந்த--எட்டாம் நூற்றாண்டில் எந்த எந்த வருஷங்களில் நிகழ்ந்துள்ளன என்று தெரிந்துகொள்வது இன்றியமையாதாகின்றது. சௌரமானப்படி மார்கழிமாதத்தில் சூரியன் தனு ராசியில் தங்குவதாலும், சூரியனுள்ள இடத்திலிருந்து சுக்கிரன் 48-பாகைத் தூரத்துக்குமேற் செல்லுவதில்லை யாதலாலும் அம்மாதத்தில் சுக்கிரன்-- துலாம், விருச்சிகம், தனுசு என்ற இராசிகளுக்குள் இருத்தல்' வேண்டும். மேலும், சுக்கிரனு தயமும் வியாழனஸ்தமனமும் ஒரே காலத்தில் நேர்வதனால், சுக்கிரன் தங்கும் இராசிக்கு ஏழாமிராசியாகிய மேஷ ரிஷப மிதுனங்க ளொன்றில் வியாழன் இருத்தலும் வேண்டும். இந்நிலைமைப்படி, மார்கழிப் பௌர்ணிமை யன்று காலை 5-மணிக்கு முன், 165 முதல் 185 பாகைக்குள் வெள்ளி வியாழங்கள் எதிர்தோன்றும்படி நேர்ந்த நிகழ்ச்சி, பெரியாழ்வாா விளங்கிய 8-ம் நூற்றாண்டிலும் அதற்கு முன்னும் பின்னும்-அஃதாவது 7-முதல் 9-ம் நூற்றாண்டு முடிய எந்த எந்த வருஷத்தில் உண்டா "