பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஸ்ரீ கோதையார் 125 தாயினும், வக்கிர முதலிய கதிவேறுபாடுகளால் பின்னும் அதிக வருஷங்கள் தள்ளியும் நிகழக்கூடியன என்பது தெரியலாம். இனி, மேற்கூறியவாறு பெரியாழ்வார் காலமாகப் பெறப்பட்ட 8-ம் நூற்றாண்டில் வெள்ளி யெழுந்து வியாழமுறங்கிய' நிகழ்ச்சி ஒரே முறைதான் வந்துள் ளது. அஃதாவது--731-ஆம் ஹ டிசம்பர்t 18s அதி காலை 3-50 முதல் 4-வரையுள்ள மணி ஆகும். (வெள்ளி யெழுதற்கு 3-50-மணியும், வியாழமுறங்குதற்கு 4-மணி யும் முறையே கொள்க.) 731-ம் ஆண்டுக்கு 131-வரு ஷங்கட்கு முன் 600-ஆம் ஆண்டினும், இதற்கு 154-வரு ஷங்கட்குப் பின்பு 885, 886-ஆம் ஆண்டுகளினும், அக் கிரகங்களின் உதயாஸ்தமனங்கள் ஒப்ப நிகழ்ந்திருக் கின்றன. 600-ஆம் ஆண்டை ஆழ்வார் திருமகளார் பாசுரத். துக்குரியதாகக் கொள்வதாயின், அது, முதற்றொகுதி யடியாருள் ஒருவரான திருமழிசைப் பிரான் விளங்கி யதும், பெரியாழ்வார் செய்திக் கேற்றவாறு திருமாலடி யார்களான பாண்டியரின் ஆட்சி நிகழாததுமான கால விசேடமாகும். அன்றியும் 600-ஆம் வருஷத்து மார் கழிப் பௌர்ணிமையன்று, வெள்ளி யெழுந்து வியாழ முறங்கிய நேரம் 3-மணி 20-நிமிஷமாதலால், நீராட்டத் துக்கு மகளிர் துயிலெழக் கூடிய சமயமாதற்கு அஃது அத்துணையாக ஏற்புடைய துமன்று, இனி, 885, 886-ஆம் ஆண்டுகள் திருப்பாவைக்கு. உரியனவாகக் கொள்வதாயின், அவை, ஆசாரியருள் தலைவரான ஸ்ரீமந் நாதமுனிகளும் அவர் சிஷ்யர்களும் பிரபலம் பெற்றிருந்த காலவிசேடங்களாகும். அவற்று