பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

126 ஆழ்வார்கள் காலநிலை ளொன்றை ஆழ்வார் திருமகளார்க்குக் கொள்வது சிறி தும் பொருத்தமுடையதன் றென்பது முன்னர்க் குறிக் கப்பட்டது. பின்னரும் அது விரிக்கப்படும். ஆகவே, அவ்விருவகைக் காலங்களிலும் நிகழ்ந்த அவ்வுதயாஸ்த மனங்களை ஆண்டாள் திருவாக்குக் குறிப்பதன் றென்பது திண்ணமென்க. இனி, எஞ்சிநின்ற 731-ஆம் வருஷத்து மார்கழிப் 'பௌர்ணிமையன்று, வெள்ளி யெழுச்சியும் வியாழன் வீழ்ச்சியும் அடிவானநாளிற் காணக் கூடியவாறு அதி காலையில் 3-50-4 மணிக்கு ஒப்ப நிகழ்ந்திருக்கின்றன. இந்நேரம் மார்கழி நீராட்டத்துக்காக மகளிர் துயி லெழுதற்குப் பெரிதும் ஏற்றதேயாகும். மலையாள நாட்டில் விசேடமாக நடைபெறும் மார்கழி நோன்பாகிய திருவாதிரைத் திருவிழாவிலும், இளம் பெண்கள் வைகறையில் துயிலெழுந்து நான்கு மணிக்கே நீராடிவிடும் வழக்கம் இன்றும் உள்ளமை காணலாம் அம்முறையில், பஞ்ச பஞ்ச உஷத்காலம்' எனப்படும் ஸ்நான ஸமயத்துக்குச் சிறிது முன்ன தாகவே துயிலுணர்ந்த ஆண்டாள், தம் கண்ணாரக் கண்ட வானநிலையையே இங்ஙனம் பாடலாயினர் எனல் பெரிதும் பொருந்துமென்க, எனவே, 731-ஆம் வருஷத்து மார்கழிப் பௌர்ணிமையன்று அதிகாலையே, சூடிக் கொடுத்த சுடர்க்கொடியின் திருவாக்கினின்றும் அத் திருப்பாவை அவதரித்த சுபகாலமாகவேண்டும் என்று நாம் கொள்ளத் தடையில்லை. வெள்ளி வியாழங்களின் உதயாஸ்தமனங்கள் அம்மாதத்தில் ஒரு சேர நிகழ்ந்து நெடுங்காலமான அருமையை அறிந்து போலும், எல்லா ருங் கூறுமுறையில் வெள்ளி யெழுந்து' என்றதுடன் நில்லாது, வியாழ முறங்கிற்று' என்று சேரவைத்து ஆண்டாள் பாடுவாராயினர் என்க,