பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

128 ஆழ்வார்கள் காலநிலை பிராட்டியின் அவதார தினமாக கொள்ளக் கூடியதா கின்றது. இங்ஙனம் கண்ட காலக் குறிப்புக்களை முழுதும் நம்பி ஆழ்வராகளின் அவதாரகாலங்களை நாம் ஒருதலை யாகத் துணிதல் கூடாததேயாம். ஆயினும், திருப் பாவை கூறும் வெள்ளிவியாழங்களின் உதயாஸ்த மனங்கள் நிகழ்ந்த காலமாக மேலேபெறப்பட்ட 731-ஆம் ஆண்டைக்கொண்டு நோக்கும்போது, 716ஆம் வருஷத்துத் திருவாடிப்பூரம், ஆண்டாள் அவதார தினமாவதற்கு மிகவும் ஏற்றதாதல் காணலாம். 716-ல் அவதரித்த கோதைப்பிராட்டியார் 731-ல் தம் திருப்பாவையை அருளிச்செய்தவராயின், 15-ஆம் பிராயம் அப்போது அவர்க்கு நடைபெற்றது என்பது நன்கு பெறப்படும். அப்பிராட்டி தம் திருமொழியைப் பாடும்போது தக்க பருவத்தினராயிருந்தவர் என்பது

     " அவரைப் பிராயந் தொடங்கி யென்றும்

ஆதரித் தெழுந்தவென் தடமுலைகள் துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத் தொழுதுவைத்தே னொல்லை விதிக்கிற்றியே” " ஊனுடை யாழிசங் குத்தமர்க்கென் றுன்னித் தெழுந்தவென் தடமுலைகள் மானிடவர்க் கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே என்று தாமே தெளிவாகக் கூறுதலால் வெளியாகத் தக்கது. இங்ஙனம் ஆண்டாளது திருவாக்காலும் அவரது ஞானமுதிர்வாலும், திருவரங்கச் செல்வரான அழகிய மணவாளன் அப்பிராட்டியை அங்கீகரித் தருளிய காலத்தே 15-திருநட்சத்திரத்துக்கு மேல் நடை.