பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஸ்ரீ கோதையார் 129

    பெறவில்லையென்பது நாம் ஒருவாறு அறியக்கூடியதா கின்றது.

இனி, கருடவாகன பண்டிதரால் அருளிச்செய்யப் பட்ட, திவ்யசூரிசரிதத்தில், ஸ்ரீவிஷ்ணுசித்தர் ஆண்டாள் திருமணத்தைப்பற்றி ஆலோசனைபுரியவிரும்பித் தம் திருமகளாருட்டன் ஆழ்வார்திருநகரி சென்று ஸ்ரீசட கோப ருடன் கலந்தனரென்றும், அப்போது குலசேகாப் பெருமாள், தொண்டரடிப் பொடிகள் முதலிய திருமாலடி யார்களும் அங்கெழுந்தருளி அளவளாவினர் என்றும், திருமங்கை மன்னன் தம் குலத்தொழிலில் முனைந்து நின்றது அக்காலந்தான் என்றுங்கூறப்பட்ட செய்தி, தொடக்கத்தே எழுதப்பட்டுளது.

       இத்திவ்ய சூரிசரிதமோ, பின்பழகியபெருமாள்சியர் முதலிய பூர்வாசாரியர்களால் பிரமாணகிரந்தமாக எடுத்தாளப்பெற்ற பெருமையுடையதாம். இந்நூல் கூறும் வரலாறுகள்சில பின்வந்த குருபரம்பரைச் செய்திகளோடு மாறுபடுவனவாயினும், அவை ஆள வந்தார் இராமாநுசர்காள்களிற் பிரபலமாக வழங்கிவந்த செய்திகளாகவே கொள்ளத் தடையில்லை.
       அதனால், பெரியாழ்வாரும் அவர் திருமகளாரும், நம்மாழ்வார் திருமங்கையார் முதலிய அடியார்கள் காலத்தவர் என்பதே பண்டையாசிரியர்கள் கொள்கை என்பது பெறப்படும். இதற்கு, ஏனையாழ்வார்களின் திருவாக்குக்களும் பிறசாதனங்களும் எத்துணையாக உதவுவன என்பதை அறியவிரும்பித் திருமங்கை மன்னன்விஷயத்தை முதலிற்கொண்டு ஆராய்வேன்,