பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆழ்வார்கள் காலநிலை களேனும் ' அவரை வழிபட்டுவந்த கொள்கைகளேனும், இருந்தனவென்று தெரியவரவில்லை. ஆனால் திருமால், முருகக்கடவுள், கொற்றவை என்பார்க்கு அவ்வாற மைந்த கோயில்களும் வழிபாடுகளும் பழங்கால முதல் இன்றுவரை இந்நாட்டில் உள்ளன. எனவே, வைணவம், கௌமாரம், சாத்தம் போன்ற கொள்கைகள், தமிழ கத்தில் விளங்கிய ஆதிசமயங்கள் என்பது பெறப்படத் தடையில்லை. இத்தெய்வப்படிவங்கள் அமைந்த கோட்டங்கள் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே பெருகி விளங்கின என்பதும், அவற்றையும் அவற்றின் அறப்புறங் களையும் அரசர் நேரிற் சென்று பாதுகாத்து வந்தன ரென்பதும், “ மேவிய சிறப்பி னேனோர் படிமைய முல்லை முதலாச் சொல்லிய முறையாற், பிழைத்தது பிழையா தாகல் வேண்டியும் இழைத்த வொண்பொருள் முடியவும் பிரிவே." (தொல். அகத். 30) என்ற சூத்திரத்துள் . அவ்வாசிரியர் கூறுதலால் அறியலாம். இங்ஙனங் கோயில்கொண்ட கடவுளருள், 1. 'வருணராஜா, இந்திரராஜா'வின் கோயில்கள் தஞ்சையிலிருந்தன வென்று சாஸனமும் (.ii. i, p. 414.}, இந்திராயுதமுள்ள வச்சிரக் கோட்டம்' என்ற கோயில் காவிரிப்பூம்பட்டினத்தி லிருந்ததாகச் சிலப்பதிகாரமும் (9, 12) கூறும்; ஆயினும், அவை திக்குப்பாலக வணக்கம் பற்றியும், அவ்வவ்விடத்துக்கமைந்த சிறப்பியல்புகள் பற்றியும் நிருமிக்கப்பட்டனவேயன்றி, நிலவுரிமை பற்றி யவை அல்ல என்க. 2. இச் சூத்திரத்திற்கு உரையாசிரியரான இளம்பூரண வடிகன் கூறிய பொருளே ஈண்டுக் கொள்ளப்பட்டது. அவர்,