பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறாம் அதிகாரம

       திருமங்கை மன்னன். இனி, ஆழ்வார்களுள் பிற்பட்ட வராகச் சொல்லப் படும். திருமங்கை மன்னனைப்பற்றிப் பின்பழகிய பெருமாள்சீயர் குருபரம்பரை முதலியன கூறும் சரிதத் தின் சுருக்கம அடியில் வருமாறு:

சோழமண்டலத்தே திருவாலி நாட்டைச் சார்ந்த திருக்குறையலூரிலே, அவ்வாலிநாட்டுக்குத் தலைவரான கள்வர்குலத்தில் இவ்வாழ்வார் அவதரித்தவர். கலியன் என்ற திருநாமத்துடன் வளர்ந்து அறிவு திருவாற்றல் கள் நிரம்பியவராய், தக்க பருவம்வந்ததும் தம் தந்தை யுரிமைகளைப் பெற்றுத் தாமே ஆலிநாட்டின் தலைவராக, வும், சோணாட்டரசன் கீழ்ச் சேனைத்தலைவருள் ஒருவ ராகவும் விளங்கினர். அப்போது, திருநாங்கூரில் வைத்திய சிரேஷ்ட ராயிருந்த பாகவத ரொருவரால் அருமையாக வளர்க்கப் பெற்று வந்த குமுதவல்லியார் என்ற பெண்மணியைத் திருமாம் புரிந்து தாமும் பரமபாகவதராகி அவளுடன் திருமாலடியார்களை ஆராதிப்பதில் தம் செல்வங்களை மட்டு மன்றி அரசிறையாகத் தம்மிடமிருந்த பெரும் பொருளையுஞ் செலவிடலாயினர். . இச்செய்தி அறிந்ததும் அரசன் கலியனது சிற்றர சுரிமையைப் பற்றிக் கொண்டதோடு, இவரையும் சிறையிலிடுவித்தனன். இவர் அவ்வாறு சிறைப்பட் டிருந்தபோது திருமாலை நோக்கிப் பலவாறு வேண்ட, அப்பெருமான் இவர் கனவில் தோன்றிக் காஞ்சீபுரத் தேற வந்தால் உமக்கு வேண்டியதிரவியந் தருவோம்'