பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

132

            ஆழ்வார்கள் காலநிலை

பாடவும், எதிர் நின்ற கூட்டம் திடீரென்று மறைந்தது. திருமாலும் கருடாரூடராய் விண்ணுறநின்று கலியர்க்கு அற்புதக் காட்சி யளித்தனர்.

      இவ்வாறு எம்பெருமான் தமக்குச் செய்த நிர்ஹேதுக பரமகிருபையை நினைந்து நினைந்துருகி ஆடிப்பாடி அகங்களித்துப் பெருமான் திருக்கோயில் கொண்ட திருப்பதிகட்கெல்லாம் நேரிற்சென்று மங்களா சாஸனம் பண்ணியும், புறச்சமயத்தவர் பள்ளிகளி னின்றும் கொள்ளையிட்ட திரவியங்களைக் கொண்டு திருவரங்கப் பெருநகரின் சுற்றுத்திருமதி லெடுத்து முற்றுவித்தும் இவ்வாறு நெடுங்காலம் வாழ்ந்து, முடிவில் திருக்குறுங்குடியிலே தன்னடிச் சோதிக்கெழுந் தருளினர்-என்பதே.

இவ்வரலாறுகளையோ திவ்யசூரி சரிதமும் கூறுவ தாயினும், திருவரங்கச் செல்வர் கோதைப் பிராட்டி யாரைத் திருக்குருகூரில் திருமணம் புரிந்து அப் பிராட்டியுடன் தம் திருவரங்கப் பெருநகர் நோக்கி மணக் கோலமாகப் பரிவாரங்களுடன் செல்லுமிடையில் களவுத் தொழிலில் முனைந்து நின்ற திருமங்கை மன்னன் பதுங்கி நின்ற தம் படர்களுடன் அவர்கள் மேல்விழுந்து வழிமறித்து, மாயோனை வாள்வலியால் மந்திரங் கொண்டு பேரருள் பெற்றனரென்ற செய்தி மட்டும் வேறாகக் காணப்படுகின்றது.

     சிவனடியாரான திருஞான சம்பந்தமூர்த்திகளைத் திருமங்கை மன்னன் நட்பு முறையிற் சந்தித்து அள வளாவிய செய்தியையும் ஏனைக் குருபரம்பரைகளின் மாறாக திவ்யசூரிசரிதங் கூறும்.
     இப்பெரியார் அருளிச்செய்த திவ்யப் பிரபந்தங் கள் :-- பெரிய திருமொழி, திருக்குறுந்தாண்டகம், திரு