பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

138 ஆழ்வார்கள் காலநிலை இவ்வாராய்ச்சிக்குப் பல்லவவமிசாவளியின் ஒரு பகுதியை நாம் முதலில் தெரிந்துகொள்வது உதவி யாகும். அது வருமாறு: பல்லவ வமிசம். 1. சிம்மவிஷ்ணு 2. மஹேந்திரவர்மன் 3. நரசிம்மவர்மன் 4. மகேந்திரவர்மன் 5. பரமேசுவரவர்மன் 6. இராஜசிம்மன் 7. பரமேசுவரவர்மன் 8 நந்திவன்மன் (பல்லவமல்லன் 717-779) 9. தந்திவர்மன் திருமங்கைமன்னன் அருளிய பெரியதிருமொழியில், பரமேச்சுரவிண்ணகரப்பதிகமும் ஒன்று. பரமேச்சுர விண்ணகரம் என்பது காஞ்சீபுரத்துள்ள வைகுண்டப் பெருமாள்கோயில் என்ற தலமாகும். அக்கோயிலைப்பற்றிய பதிகத்தில், இவ்வாழ்வாராற் பல்லவனொருவன் செய்திகள் பலபடியாகப் புகழ்ந்து கூறப்படுகின்றன. அச்செயல்களை நோக்குமிடத்து, அவையாவும் மேற்குறித்த வமிசாவளியின் 8-ஆம்