பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 139எண்ணிற்கண்ட பல்லவமல்லனான நந்திவன்ம னுடையன என்பது, அவன் சாஸனங்கூறும் வரலாறு களோடு பெரிதும் ஒத்துள்ளமையால் தெளியப்படு கின்ற து.' உதயசந்திரன் என்ற சேனாபதி, தன்னரசனான நந்தி வர்மனுடன் எதிர்த்த தலைவர்களை -மண்ணைக்குடி, நிம்பவனம், சூதவனம், சங்கரக்கிராமம், நெல்வேலி,. காளிதுர்க்கம் என்ற களங்களில் நடந்த போர்களிலே வென்றதாக உதயேந்திரசாஸனம் கூறுகின்றது, அச்சாஸனத்தின் எழுத்தமைதியால், அது பத்தாம் நூற்றாண்டினனான பராந்தகசோழன் காலத்ததாயினும், அதனுட் குறிக்கப்பட்ட பழஞ்செய்திகளினின்று, முற் பட்ட. சாஸனமே அச்சோழனாட்சியில் நடந்த திருப்பணி பிற் பெயர்த்துவரையப்பட்டதென்று கருதப்படு கின்ற து. | அவ்வுதயேந்திரசாஸனங் கூறும் போர்க்களங் களுள்ளே-மண்ணைக்குடி, நெல்வேலி, காளிதுர்க்கம் என்பன ஆழ்வாரது பரமேச்சுரவிண்ணகரப் பதிகத்தும் குறிப்பிக்கப்படுகின்றன. இவற்றுடன் அச்சாஸனங்கூறும் மற்றப்போர்களையும் சேர்த்து; 1. s.i. i. ii, p. 362. 2. நிரந்தவர் மண்ணையிற் புண்ணுகர்வேல் நெடு வாயிலுகச் செருவில் முனநாட்-பரந்தவன் பல்லவர்கோன் (பெரிய திருமொழி, 2, 9, 3). “விடை-த்திறல் வில்லவன் நெல்மெலியில் வெருவச்செருவேல் வலங்கைப் பிடித்தபடைத்திறற் பல்லவன்கோன்" (க்ஷ, 2, 9, 8). "தேம் பொழிற் குன்றெயில் தென்னவனைத் திசைப்பச் செருமேல் வியந்தன்று சென்ற பாம்புடைப் பல்லவர்கோன் ( ஷ, 2, 9, 5).