பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

140 ஆழ்வார்கள் காலநிலை நோக்குமிடத்து, அவையாவும் பாண்டிநாட்டின் எல்லைப்புறத்தில் நந்திவர்மன் சேனாபதியால் பாண்டிய னுடன் நடத்தப்பட்டனவாகவே தெளிவாகின்றன. இங்ஙனம் பல்லவசேனைகளுடன் அவ்வெல்லைப் புறத்தில் எதிர்த்து நின்ற பாண்டியன், பெரியாழ்வார் காலத்தவனாக மேலே நான் விளக்கிப்போந்தவனும், தமிழ்நாட்டின் பெரும்பாகத்தை ஆட்சிபுரிந்து வந்த. பேரரசனுமாகிய மாறவர்மனே என்பது வேள்விகுடிச் சாஸனத்தால் தெளியப்பட்டது; திருமங்கைமன்னனும், பல்லவமல்லனாகிய நந்திவர்மனுக்குப் பெரும்பகைவனாக இருந்தவன், பாண்டியனென்றே பல பாடல்களிலுங் கூறுதல ஒப்பிடற்குரியது, 1. இப்போர்க் களங்களுள்ளே-மண்ணைக்குடி என்பது தஞ்சாவூர் ஜில்லா அறந்தாங்கித் தாலுகாவைச் சார்ந்த மண்ணக்குடி என்ற ஊர் ஆகும், இதனை -திருவிசலூருக்கும் கும்பகோணப்பக்கத்துள்ள இடவைக்கும் சமீபமான மண்ணி என்று புரொபஸர் - தூப்ராயில் துரை தம் பல்லவ சரித்திரத் தில் எழுதியது பொருத்தமானதன்று (செந்தமிழ், தொ. 17, பக். 37). மண்ணைக்குடியை ஆழ்வார் மண்ணை என்று திரித்தது, தமிழ்முறையே, சூதவனம், நிம்பவனம், சங்கரக் கிராமம் என்று சாஸனங்கூறும் ஊர்கள், ஷே ஜில்லா பட்டுக்கோட்டைத்தாலுகாவில் உள்ளன. இவற்றுள்சூதவனம் திருவுசாத்தானம் எனத்தேவாரத்தும், கோவிலூர் என வழக்கிலும் வழங்கும் சிவதலமாகும். நிம்பவளம் என்பது வேப்பங்காடு என்றுள்ள ஊரின் வடமொழிப் பெயர்ப்பாகும். புதுக்கோட்டைச் சீமைத் திருவரங்குளச்சாஸனமொன்றில் இந்நிம்பவனம் கூறப் படுதல் கொண்டு, அஃது அப்பக்கத்தது என்பது தெரியலாம். சங்கரக்கிராமம் என்பது அப்பிரதேசத்துள்ள சங்கரனார் குடிக்காடு என்ற ஊராதல் வேண்டும். குடிக்காடு