பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

142 ஆழ்வார்கள் காலநிலை திருமால் கோயில்கள் பெயர்பற்றிருந்தலுங் காண்க, நந்திபணி செய்த நகர்நந்திபுர விண்ணகரம்" என்று திருமங்கைமன்னன் பாடுதலும் அறியத்தக்கது. பரமேச்சுரன் என்பது, முற்கூறிய வம்சாவளியில், 'நந்திவன்மனுக்கு முன்பும் இராஜசிம்மனுக்குப் பின்பும் ஆட்சி புரிந்த பல்லவவேந்தன் பெயராயிருத்தல் கொண்டு, இவ்விண்ணகரம் அவ்வரசனாற் கட்டிப் பிரதிஷ்டிக்கப்பட்டதென்று கருதலாயினர், சரித்திர வறிஞர் பலரும். இது பொருத்தமன்று, ஆழ்வார் தம்பதிகத்தில் பல்லவன் பணிந்த பரமேச்சுரவிண்ண கரம்' என்று முடித்துப் பாடிய இடங்களிலெல்லாம் அங்ஙனம் பணிந்த பல்லவனது செயல்களையே கூறு கின்றார். அச்செயல்கள் யாவும் முன்னவனான பரமேச்சுர பல்லவனுக்குரியன ஆகாது, மேலே விரித்துக் கூறிய படி, அவன்பின் பட்டமெய்திய நந்திவன்மனுடையன வாகவே உள்ளன. தன்பெயரால் விண்ணகரம் கட்டிய பரமேச்சுரன் என்பவன் நந்திவர்மனுக்கு முன்னராண்டவனாயின், அப்பல்லவ னியற்றிய கோயிலைச் சிறப்பிக்கப்புகுந்த ஆழ்வார், அவன் புகழ்களைக் கூறாமல் அவனுக்குப்பின் பட்ட மெய்தியவனைப் பெரிதும்புகழ நியாயமில்லை. அன்றியும், பரமேச்சுரவிண்ணகரமாகிய வைகுண்டப் பெருமாள் கோயிற் பிராகாரத்தில் அமைந்த சிற்பவுரு வங்கள் யாவும், அப்பரமேச்சுரபல்லவன் சம்பந்தமின்றி, வேறு பல்லவனைப் பற்றியனவாகவேயுள்ளன. நந்திக்குமுன்பாண்ட பரமேச்சுரன் கட்டியதே அவ்விண்ணகரமானால், அவன் வரலாற்றை விளக்கும் உருவங்களன்றோ அக்கோயிலுள் அமைந்திருத்தல் 1. பெரிய திருமொழி. 5, 10, 7.