பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 143 வேண்டும்? அவ்வாறில்லாமையால், பரமேச்சுரன் என்பவன், பலபோர்களில் வெற்றிபெற்றவனாகத் திருமங்கையார் பாடிய நந்திவன்மனின் வேறல்லன் என் பது தெரியலாம். ஆயின், பரமேச்சுரன் என்ற பெயர் வழக்குப் பல்லவமல்லனான அங்கந்திக்கு உண்டோ எனின், கூறுவேன். அப்பரமேச்சுர விண்ணகரத்தின் தென்புறத்து உட்பிராகாரத்து அமைந்த சிற்பவுருவங்கள் நந்திவன் மன் ஆட்சிபெற்றது முதலிய வரலாறுகளைப்பற்றியன என்பது, அவ்வுருவங்கள் சிலவற்றின்கீழே பழமையாக வரையப்பட்ட எழுத்துக்களால் அறியப்படுகின்றது." பல்லவவமிசாவளியின் 6-ம் எண்ணுக்குரிய இராஜ சிம்மன் மகனான பரமேச்சுரபல்லவன் சந்ததியின்றியே காலமாயினபின், ஆட்சியடையத்தக்கவர் கிடையாமை யால் நாடு குழப்பமடைந்து நின்ற நிலையில், பல்லவ குலத்தவரான இரணியவர்ம மகாராஜா என்பவரை மந்திரிகளும் நகரத்தலைவர்களும் அணுகி உசாவ, அவர் தம் மக்களை அழைத்து அரசியலை யேற்கும்படி கேட்க வும், அவருள் மூவர் மறுத்தனராக, நான்காமவனும் பன்னீராட்டைச் சிறுவனுமான பல்லவமல்லன் என்ற பரமேசுவரவர்மன் தான் அதனை ஏற்றுநடத்த உடம் பட்டதும், மந்திரிகளும் நகரத்தலைவர்களும் பெரிதும் மகிழ்ந்து அரச மரியாதைகளுடன் காஞ்சிமாநகரில் அவனை எதிர்கொண்டழைத்து--ஸமுத்ரகோஷம் என்ற கடுமுகவாத்யமும், கட்வாங்கத்வஜமும், விருஷபலாஞ் சனையும் அளித்து, நந்திவர்மன் என்று அபிஷேகநாமஞ்சூட்டித் தங்கள் அரசனாகக் கொண்ட வரலாறுகள் அச்சிற்ப வுருவங்களின் கீழே வரையப்பட்டுள்ளன. 1, S. I. I. IV. p. 11.