பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

146 ஆழ்வார்கள் காலநிலை அன்றியும் வயிரமேகன் தன்வலி தன்புகழ் சூழ்ந்த கச்சி” என்று வேறொருவர் வலியும் புகழும் கச்சிக் குரியன அல்ல என்பதுபட வற்புறுத்திக் கூறுவ தாலும், அவ்வயிரமேகனது கீர்த்திப் பிரதாபங்களை ஆழ்வார் நேரிலறிந்தவர் என்பது உறுதிப்படுகின்றது. இவ்வாறாக அப்பாசுரத் தொடரின் இயற்கை யமைப்பைச் சிந்திப்போர் எவர்க்கும் வயிரமேகன் என்பான் திருமங்கை மன்னன் காலத்துக்குச் சிறிதேனும் முற்பட்டவன் என்று கருத இடமே இராதென்னலாம். ' இங்ஙனம், ஆழ்வார்க்குச் சமகாலத்தவனாகத் தெரியும் இவ்வயிரமேகன் இன்னான், இன்னகாலத்தவன் என்பவற்றை முதன் முதலாகக் கண்டு யான் கொண்ட கருத்துக்களைத் திருமங்கையாழ்வாா காலவாராய்ச்சி' என்ற தலைப்பெயரின்கீழ் 27-ஆண்டுகட்கு முன்பு செந்தமிழ்ப் பத்திரிகையில் வெளியிட்டேன். அக்கட்டுரை யின் சுருக்கம் அடியில் வருமாறு:-- மேற்குறித்த திருமங்கையார் பாசுரத்தொடர்ககு-' தொண்டையர் கோனான வயிரமேகன் வணங்கும் ' (திரு)மாலை; (அவன்) வலிபுகழ்கள் சூழ்ந்த கச்சியிலுள்ள அட்டபுயகரத்து ஆதியை என்று கொண்டு கூட்டி முன்னோர் பொருள் கூறுவர். இவ்வாறு தொண்டையர்கோன் வணங்கும் மாலை' என்றும், 'வயிர மேகன் தன்வலி தன்புகழ் சூழ்ந்த கச்சி' என்றும் இருபிரிவாக்கிப் பொருள் கொள்ளுமிடத்து 'ஆசிரி யன் பேரூர் கிழான் வந்தான், செயிற்றியன் உண்டான்'