பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 147 என்புழிப்போல, தொண்டையர் கோனும் வயிர மேகனும் இரு வேறானவர் என்ற கருத்து எளிதிற் பெறக்கூடியதாகவும், ஒருவன் என்பது வலிதிற் கொள்ளக் கூடியதாகவும் அமைகின்றன. திருமங்கை மன்னனது வாக்கின் போக்கை நோக்குவோர்க்கு ஆற்றொழுக்கான பொருளமைதி பெறப் பாடுவதே அப் பெரியாரியல்பு என்பது விளங்கத் தடையில்லை. அம்முறையில் மன்னவன் தொண்டையர் கோன் வணங்கும்' என்ற தொடர் வயிரமேகனுக்கு விசேடணமென்பதும், தொண்டையர் கோனால் வணங் கப்படும் வயிரமேகனது பெருமை சூழ்ந்த கச்சிநகரைச் சார்ந்த அட்டபுயகரம்' என்பதே மேற்கூறிய அடி கட்கு நேராகச் செல்லும் பொருள் என்பதும், வயிர மேகன் என்பவன் வேற்றரச னென்பதும், அவன் கச்சிப் பல்லவனை வணங்கச் செய்து தன்பெருமையை அக்கச் சியிற் பரப்பினவனென்பதும் பெறப்படும். இவ்வாறு பாசுரப் போக்காற் பல்லவனை வணக்கிய வனாகத் தெரியவரும் வேற்று வேந்தன் யாவன் என்று ஆராய்ச்சி செய்த விடத்து, இராஷ்டிரகூடருள்ளே பெருவலிபடைத்த தந்திதுர்க்கன் என்ற வேந்தன் (கி. பி. 753--4) பல்லவனது தலைநகரமான காஞ்சியின் மேற் படையெடுத்து வந்து அவனை வென்றவன் என்றும், அவனுக்கு வயிரமேகன் என்ற சிறப்புப்பெயர் வழங்கி வந்த தென்றும் சாஸனங்களாலும் சரித்திரங்களாலும் தெரிய வந்தது. அதனால் தொண்டயர் கோன் வணங்கும்......... வயிரமேகன் தன்வலி தன்புகழ் சூழ்ந்த கச்சி' என்று 1. தொல்காப்பியம், சொல், 42, சேனாவரையம், 2. Kadaba Plates-Ep. Ind. Vol.IY, p. 334.