பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

148 ஆழ்வார்கள் காலநிலை ஆழ்வார் கூறியவரலாறு அவ்விரட்ட வேந்தனதே. யாதல் வேண்டும் என்று கருதலானேன். இவ்வயிரமேகன் காலத்துப் பல்லவ வேந்தன் மேலே கூறிய நந்திவர்மன் (715-80) ஆவன். தந்தி துர்க்கனான வயிரமேகன் நந்திவர்மனை வென்றபின் அவனுடன் சமாதானம் பெற்றுத் தன்மகள் ரேவா என் பவளை அவனுக்கே மணம் புரிவித்துச் சென்றனனென் றும், அப்பல்லவனுக்கு அத்தேவிவயிற்றுப் பிறந்த மகனே தந்திவர்மன் என்றும் சரித்திரவறிஞர் கருது கின்றனர். இக்கருத்து உண்மையாகுமாயின், இரட் டனான வயிரமேகன் மாமன் முறைபற்றியும் அந்நந்தி வர்மனால் கௌரவிக்கப் பட்டவனாவன் என்க. எனவே, தம் காலத்தில் இரட்டபல்லவர்க்குள் நிகழ்ந்த விசேட சம்பவங்களை நேரிலறிந்தே திருமங் கையார் வயிரமேகனைப்பற்றிக் கூறலாயினர் என்பதும், அவ்வேந்தன் கச்சிமாநகரிற் படையெடுத்த கி, பி. 754-ல் அவ்வாழ்வார் தம் அட்டபுயகரப்பதிகத்தை அருளிச் செய்தவராதல் வேண்டும் என்பதும் பெறப் படக்கூடியன. இவையே ஆதியிற் கண்ட என் கருத் துக்கள், இங்ஙனம் முதன் முதலாக யான் கண்டு வெளி யிட்ட கருத்தைச் சரித்திரவறிஞரிற் சிலர் முழுதுந் தழுவிக்கொண்டனர். ஆனால் மற்றொருசாரார் ஒரு சில ஆட்சேபங்களை நிகழ்த்தி என் கொள்கையை ஏற்க வில்லை. அன்னோர்வாதங்களுள் தலைமையானது பல்லவ 1. ராவ்பகதூர். டாக்டர் S. கிருஷ்ணஸ்வாமி ஐயங்கார். M. A. அவர்கள் முதலியோர். 2. தஞ்சை ராவ்பஹதூர் கே. எஸ். ஸ்ரீ நிவாச பிள்ளையவர்கள், திருவனந்தபுரம்; ஸ்ரீமாந். கே. ஜி. சேஷ ஐயரவர்கள் (Retired High court Judge) முதலியோர்.