பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 149 மல்லனான நந்தியைப் பெருவீரனென்றும் திருமாலடிய னென்றும் பரமேச்சுர விண்ணகரப் பதிகத்திற் புகழ்ந்து பாடிப் போந்த திருமங்கை மன்னன், அட்டபுயகரப் பதிகத்தில் அவனை வேற்றுவேந்த னொருவனுக்கு அடங் கிப் பணிந்தவனாக இழிவுபடப் பாடார் என்பதேயாம். இதற்கு அப்போது யான் எழுதிய விடை அடியில் வருமாறு: “அட்டபுயகரப்பதிகத்தைத் திருமங்கை மன்னன் பாட நேர்ந்தபோது-பரமேச்சுர விண்ணகரப் பதிகத்தைப் போல, பல்லவனைச் சிறப்பிக்கச் சங்கற்பித்துக் கொண்டு அவர் பாடினவரல்லர். அவ்வட்டபுயகரம் கச்சிப்பேரூரைச் சார்ந்தது என்பதைக் குறிக்க வந்தவர், அப்போதிருந்த கச்சியினிலைமை ஒன்றையும் வயிரமேகன் தன்வலி தன்புகழ் சூழ்ந்த கச்சி" என்று பதிக முடிவில் வெளியிட்டருளினர். திருத்தேவனார்தொகைத் திருமாலைப் பாடநேர்ந்தபோது, இவ்வாழ்வாரே "மாவருந்திண் படைமன்னை வென்றிகொள்வார் மன்னு நாங்கைத் தேவருஞ்சென் றிறைஞ்சுபொழிற் றிருத்தேவ னார் தொகையே (பெ. தி. 44. 2.) என்று தாம் பாடப்புக்க தலத்துக்கன்றி, அத்தலத்தைத் தன்னுட் கொண்ட திருநாங்கூருக்கு, தாம் நேரிற்கண்ட வீரர் செயலொன்றை விசேடணமாக்கிக் கூறியதும் ஈண்டு ஒப்பிட்டறியத்தக்கது. பழைய அடியாரெல்லாம் ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் தலயாத்திரை செய்து பதிகங்கள் பாடி வந்தவரென்பதும், அவ்வப்போது கண்ட விசேடச் செய்தி களும் அவர்கள் வாக்கில் தன்னடைவே அமைவதுண் டென்பதும் நாம் நன்கறிந்தவை. அம்முறையே, திருமங்கை மன்னன் கச்சிப்பதி சென்று அட்டபுயகரத்துப் பெருமானைப்