பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆழ்வார்கள் காலநிலை மாக விடுக்கப்பட்ட ஏழுவிடைகளையுந் தழுவியடர்த்து -மணம் புரிந்த சரிதம், தமிழ்நாட்டிற் பிரபலம் பெற்ற தோடு தமிழ்மக்களால் நாடகமாக நடிக்கப்பெற்றும் வந்தது. “ ஆயர்பாடியி லெருமன்றத்து மாயவனுடன் றம்முனாடிய வாலசரிதை நாடகங்களில் வேனெடுங்கட் பிஞ்ஞையொடாடிய குரவையாடுதும் யாமென்றாள் கறவைகன்றுதுயர் நீங்குகவெனவே." (சிலப். ஆய்ச். குரவை.) “ மாமணி வண்ணனுந் தம்முனும் பிஞ்ஞையும் ஆடிய குரவையி.. தாமென நோக்கியும்" (மணிமே . 19, 65-6.) என்று இளங்கோவடிகளும் சாத்தனாரும் கூறுவன வற்றாலும் பிறவற்றாலும் இச்செய்தி விளங்கும். வடநாட்டார் இராதாதேவியைக் கண்ணன் காதலி யருட் சிறந்தவளாகக் கொண்டாடுதல்போல, தென்னாட் டவராற் பண்டைக்காலமுதலே பாராட்டப்படுந்தேவி இந் நப்பின்னைப்பிராட்டியே என்பதும், இச்செய்தி தமிழ் மக்களாலன்றிப் பிறநாட்டாரால் அறியப்படாததொன்று என்பதும் குறிப்பிடத்தக்கன. முல்லைநிலத்தவர் வணங்கிவந்த இக்கண்ணபிரான் வழிபாடு, தொல்காப்பியர்காலத்தே ஏனைநிலத்துக் 1. இது தமிழ் நூல்களில், 'ஏறுகோடல்' எனப்படும். இதன்முறைகளை முல்லைக்கலி முதலியவற்றிற் கண்டுகொள்க.