பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் '151 பல்லவமல்லனது வீரச்சிறப்பையும் திருமாலடிமைத் திறத்தையும் ஆழ்வார் புகழநேர்ந்த காலமும் சந்தர்ப்பமும் முற்றும் வேருக வேண்டுமென்பதும், இரட்டவரசனான வயிரமேகனை அவர் தற்செயலாகப் புகழ்ந்தது, அவனது வீரம்பற்றியேயன்றித் திருமாலடிமைத் திறம்பற்றி யன் றென்பதும் நாம் நன்றாக அறிந்துகொள்ளத்தக்கன இவ்வாறு நான் கூறிய சமாதானம் அறிஞர்களால் ஏற்றுக்கொள்ளப்படின்,ஆற்றொழுக்கான பொருளமைதி யுடன் ஆழ்வார் வாக்கியல்புக்கு ஏற்புடையதாகவும் சாஸனவாதரவு பெறுவதாகவும் உள்ள என்கருத்து முடிபாகத் தடையில்லை. இவ்வாறன்றி, வயிரமேகன் என்பான் ஆழ்வாராற் புகழப்படும் பல்லவருள் ஒருவன் என்றே கருதப்படு மாயின், அவன் பல்லவமல்லன் என்ற நந்திவர்ம னேனும் (715-780), அவன் மகன் தந்திவர்மனேனும் (780--830) ஆதல் வேண்டும். என்னெனின், பிற்கூறிய தந்திவர்மனது 9-ம் ஆட்சி வருஷத்தில் அமைந்த உத்தர மேலூர்ச் சாஸனத்திற்றான் வயிரமேகப் பெயர் முதன் முதலாகக் காணப்படுகின்றது. அவ்வூரில் உள்ள ஒரு நீர்நிலை வயிரமேக தடாகம் என்ற பெயர் பெற்றுள்ளது. கோயில்குள முதலியவை அவற்றைச் செய்வித்த அரசரின் பெயர் பெறுவது முற்கால வழக்கு. பல்லவர் பெயராலும் இத்தகைய நீர்நிலைகள் பெயர் வாய்ந்துள்ளன. 1. செந்தமிழ், தொ - 22, பக். 6, 2. S. I, I. Vol. VI, No. 358, p. 167. 3. பல்லவர், தங்காலத்தே நாடு வளம்பெற ஏரிகளும் கால்களும் உண்டாக்கி அவற்றுக்குத் தம் பெயரிட்டு வழங்கி வந்தவர் என்பது- செங்கற்பட்டு ஜில்லா மகேந்திரவாடியில்