பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 155 நியதியில்லை. அவையாவும் 'கடந்த காலம்' என்ற பொருள் கொண்டு, ஒருவன் வாழ்நாளுட் சென்ற காலத் தையும், தலைமுறை சென்ற காலத்தையும் பொது வாகவே காட்டக் கூடியன. “பண்டு மின்றும் மேலு மாய்” என்ற திருமழிசைப்பிரான் வாக்கில் (திருச்சந்த 22), அச்சொல் இறந்தகாலம் என்ற பொருளில் வழங்குதல் காண்க. ஒருவன் வாழ்நாளுள்ளே சிலபல ஆண்டுகள் கழிந் ததை மட்டுமன்றி, சில மாதங்கள் நாள்கட்கு முன் நிகழ்ந்தவற்றைக் குறிப்பதற்கும் அச்சொற்கள் முன்னோ ரால் நூல்களில் மிகுதியாக வழங்கப்பட்டுள்ளன. அதனால், அச்சொல்வழக்கைக் கொண்டு ஒரு முடிவு கட்டுதல் பொருந்தாதென்க. 1. பண்டு முதலியவை, சிலபல ஆண்டுகட்கு முன்ளிகழ்ச்சி தறித் தலை -பண்டும் பண்டும் பாடுந ருவப்ப... பெண்டிருந் தம்பதங் கொடுக்கும்' (புறம். 151). 'பண்டும் பண்டுங் கலங்கவிழ் மாக்களை யுண்டேம்' (மணிமே. 8, 18), 'பண்ட றி கிளையொடு பதியுங் காணாள்' (க்ஷ 8, 15), 'பண்டுகாமரானவாறும்...ஒக்கவுரைத்திருமி' (பெரிய திரு மொழி, 1, 3, 5), 'பண்டி .வனாய னங்காய்' (க்ஷ, 3,7, 2), வல்லேயுன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்' (திருப் பாவை. 15), 'பண்டே எரிமுன் னுன்னைப் பாவீ தேவீயாகக் கொண்டே னல்லேன்' (கம்பரா, நகர் நீங், 48 ), (விருந்தினர்) "இருவகையர், பண்டறிவுண்மையிற் குறித்து வந்தாரும், அஃதின்மையிற் குறியாது வந்தாருமென' (குறள், 43, பரி.) என்பவற்றாலும், சில பல மாதங்கள் நாள்கட்கு முன்னிகழ்ச்சி குறித்தலை-'பண்டறியேன் கூற்றென்பதனை' (குறள், 1083), 'நாணொடு நல்லாண்மை பண்டுடையேன்' (ஷை. 1133,) 'பண்டும் பலபல வீங்கிருள் காண்டும்' (திருவிருத்தம், 49) 'பண்டிப்புனத்து...கண்டிக்களிற்றையறிவன்' (யாப். வி. பக்.