பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

158 ஆழ்வார்கள் காலநிலை அவ்வாசாரியர்காலத்துப் பல்லவருளொருவனைத் திரு மங்கைமன்னன் பாடினரென்றல் சிறிதும் பொருந்தா தென்பதைப்பற்றி, முன்னும் கூறப்பட்டது; பின்னும் - விளக்கப்படும், மற்றும், இவ்வாழ்வார் காலம்பற்றி நிகழ்ந்த ' தடைகட்கு யான் எழுதிய விடைகள், திருமங்கை யாழ்வாரும் தந்திதுர்க்கனும்” என்ற கட்டுரையால் அறியத்தக்கன. ஆகவே, தந்திவர்மன் அவன் மகன் நந்திவர்மன் இவர்கள்பின்வந்த பல்லவருள் வயிரமேகப்பெயர் தரித் திருந்தவர் எவராயினும், அவர்காலத்தில் ஆழ்வார் ஒரு போதும் இருந்தவராகார் என்பதே உறுதியென்க. இவற்றால், திருமங்கையார் காலத்தவனாகத் தெளியப்பட்ட. வயிரமேகன்-தந்திவர்மன் தந்தை நந்தி வர்மன், அல்லது அவன் தாய்ப்பாட்டனும் இரட்ட வேந்தனுமான தந்திதுர்க்கன் என்ற இருவரில் ஒருவன் என்பதே முடிவாதல் காணலாம். நந்திவர்மனாயின், தன்னை வென்ற இரட்டவேந்தனது வயிரமேகப்பெயரைத் தன் கௌரவ நாமமாக அவன் தரித்தவனாதல்வேண்டும் என்று மேலே கூறினேன். இங்ஙனம் தரித்தான் என்பதும், நந்திவர்மன் வீரப் பெருமைக்கு இழுக்கென்று கருதப்படுமாயின், மகா மேகன், சித்திரமேகன், ஸ்ரீமேகன் என்று அவன் முன்னோர் கொண்டிருந்த பெயர்கள் போல, வயிரமேகன் என்பது, அந்நந்திவர்மன் பிறரிடமிருந்தன்றித் தானே 1. செந்தமிழ், தொகுதி,22 பகுதி-1. 2. மகாமேகன் என்பது மகேந்திர வர்மனுக்கும், சித்திர மேகன், ஸ்ரீமேகன் என்பன இராஜலிம்மனுக்கும் சாஸனங் களிற் பயில்வன.