பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 159) பெற்ற சிறப்பியற்பெயர் என்று கொள்ளல் வேண்டும். எவ்வகையினும் வயிரமேகப்பெயர் நந்திவர்மனுக்குரிய தென்பதும் பொருத்தமேயாம். இதற்கு வேறுசில சான்றுகளும் உள்ளன, முதலாவது:-அட்டபுயகரப் பதிகத்தின் இறுதிப்பாட்டில் வயிரமேகன் தன்வலி தன்புகழ் சூழ்ந்த கச்சி” என்று கூறிய ஆழ்வார், அடுத்துப் பாடிய பதிகத்தின் ஆரம்ப முதலாக முடிவுவரை, தன் பிள்ளைத் திருநாமமிட்டு நந்திவர்மன் பிரதிஷ்டித்த பரமேச்சுரவிண்ணகரத்தை அவன் போர்ப் புகழ்களோடு தொடுத்துப் பாடுகின்றார், வேறிடையீடில்லாமல் அமைந்துள்ள இத்தொடர் பினின்று, வயிரமேகனும் நந்திவர்மனும் ஒருவன் என்பதும் ஆழ்வார்திருவுள்ளமென்று கொள்ளக் கூடிய தாகும். வயிரமேகன் வலிபுகழ்கள் சூழ்ந்துள்ளனதாகக் கச்சிப்பதியைப் பாடிய ஆழ்வார், அப்பதிக்கு அரசனான அவன் வெற்றித்திறங்களை விரித்தற்கே, பரமேச்சுர விண்ணகரப்பதிகத்தை அடுத்துவைத்துப் பாடினர் எனல் மிகப்பொருத்தமாதல் கண்டு கொள்ளலாம். இரண்டாவது-(தொண்டையர்கோன்) வணங்குநீண் முடிமாலை வயிரமேகன் என்று ஆழ்வார் அருளிய தொடர், நந்திவர்மனது சாஸனத்தில் அவன் புகழ்ச்சியாக அமைந்த வடமொழி வாக்கியத்தின் மொழிபெயர்ப்பாக அமைந்துள்ளதாகும். அஃதாவது ப்ரணதாவநீபதி மகுடமாலிகாலீட சரணாரவிந்த' : என்பது. வணங்கும் மன்னரது முடிமாலைகளால் தழுவப்பெற்ற பாததாமரைகளை யுடையவன்' என்பது 1. S. I. I, Yol. II, p. 366.