பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 161 என்பான் நந்திவர்மன் என்பதற்கும் பொருத்தமுண்மை காண்க. இரட்ட வேந்தனிடமிருந்து இவ்வயிரமேகப் பெயரை நந்திவன்மன் பெற்றவனாயின், அவ்விரட்டன் கச்சிப்பதி யைக் கைப்பற்றிய 754-க்குப் பின்பும் ஆழ்வார் வாழ்ந் தவர் என்றும், அப்பெயர் நந்திக்கு இயல்பிலமைக் திருந்ததாயின்--அவ்வமைதிக்குக் காலவரையறை கூற இயலாமையின் - பொதுவாக நந்திவன்மனாட்சியில் அப்பெரியார் விளங்கினவர் என்றும் உணர்ந்துகொள்க. ஆக, இதுவரை செய்துபோந்த ஆராய்ச்சியால். திருமங்கைமன்னன், பல்லவமல்லனான நந்திவன்மன் காலத்தில் விளங்கிய பெரியார் என்பது எல்லா வகையாலும் தெளிவாயிற்று. நந்திவன்மன் 715-ல்பட்டம்பெற்றதற்குப் பின், தன் பிள்ளைத் திருநாமத்தாற் பரமேச்சுரவிண்ணகரங் கட்டிப் பிரதிஷ்டித்ததற்கும், திருமங்கைமன்னன் அவ்விண்ண கரப்பதிகத்தில் விரிவாகப் பாடியவாறு போர்கள் பலவற்றை அவன் நடத்தியதற்கும் சிலபலவாண்டுகள் சென்றிருத்தல்வேண்டும் என்றே நாம் கருதலாம், தனக்குப் பல முறை பெருவெற்றிகளைத் தந்து, தன் அரசியலை நிறுவியுதவிய உதயசந்திரன் என்ற சேனாபதிக்கு அவன் வேண்டுகோட்படியும் அவன் செய்த பேருதவிக்குப் பிரதியாகவும் தன் 21-ஆம் ஆட்சி வருஷத்தில் குமாரமங்கலம் விளத்தூர் என்ற கிராமத்தைச் சதுர்வேதிகளான பிராமணர்நூற்றெண் மர்க்கு அச்சேனாபதியே தன் பெயரால் தானஞ்செய்யும் படி நந்திவர்மன் கட்டளையிட்டான். என்று உதயேந் திரசாஸனம் கூறுகின்றது. 1. S.J.I. Vol. II, p. 372. 11