பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 163 காலமோ, 7-ஆம் நூற்றாண்டாகும், இதற்குக் காரணம், அந்நூற்றாண்டினரும், சிவனடியாருமான சம்பந்த மூர்த் திகளை இவ்வாழ்வார்காலத்திருந்தவராக வைஷ்ணவ சரித்திர நூல்கள் யாவும் ஒருமுகமாகக் கூறுதலேயாம். அவற்றுள் திவ்யசூரிசரிதம்:-- திருமங்கைமன்னன் புத்தரை வாதில்வென்று தம் திருநகரிக்கு எழுந்தருள் வதைச் சிவனடியாரான ஞானசம்பந்தமூர்த்திகள் அறிந்து தம்மூரான சீகாழியில் அவரை எதிர்கொள்ள, அவ்விருவரும் ஒருவர்க்கொருவர் மரியாதைகள் செய்து கொண்டனரென்றும், தம்மூர்க்குள் ஆழ்வாரை வருமாறு விரும்பிய சம்பந்தர்க்கு, 'திருமால் திருப்பதி யல்லாதவிடத்துத் தாம் செல்வதில்லை' என்று ஆழ்வார் கூற, சீகாழியில் முன்பு இராமபிரான் சந்நிதியொன்றி ருந்து அவைதிகர்களாற் பின்பு பாழாக்கப்பட்ட தென்றும், அதனுட் கோயில்கொண்டிருந்த திருவுருவம் அடியாரொருவரால் தம் மாளிகையில் ஏகாந்தமாக ஆராதிக்கப்பெற்று வருகின்றது என்றும் சம்பந்த மூர்த்திகள் தெரிவிக்க, ஆழ்வார் அவருடன் அவ்வடி யாரது மாளிகை சென்று அப்பிரானைத் தரிசித்துப் பதிகமொன்று அருளிச்செய்தனரென்றும், அதுகேட்ட ஞானசம்பந்தர் மகிழ்வுற்று, அத்திருமாலை முன்போலவே கோயிலிற் பிரதிஷ்டிக்கும்படி தம்மடியார்க்கு ஆணையிட அவ்வாறே காழிச் சீராமவிண்ணகரம் புதிய பிரதிஷ்டை பெற்றுச் சிறப்புற்றதென்றும் திவ்யசூரிசரிதம் கூறா நின்ற து. | சம்பந்தர்க்கும் ஆழ்வார்க்கும் வாதம் நடந்ததாகப் பிற குருபரம்பரைகள் கூறும் செய்தியினும், இச்சரிதக் 1. திவ்யசூரி சரிதம் - - தமிழ் மொழிபெயர்ப்பு (பக், 140-41).