பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

168 ஆழ்வார்கள் காலநிலை கோனாட்டுக் கொடும்பாளூர் என்ற ஊர், பழங்கால முதலே வேளிர் குலத்தாரது தலைநகராக இருந்த தென்பது, அவ்வூர்ச் சாசஸனங்களாலும், பெரிய புராணத்துள் இடங்கழிநாயனார் சரிதப்பகுதியாலும் தெரியலாம். கொடும்பை என்று சிலப்பதிகாரம் குறித் திருப்பதும் இவ்வூரேயாம். இந்நகரிலிருந்து ஆண்டு வந்த வேளிரின் வமிசாவளி அங்குள்ள மூவர்கோயிற் சாஸனத்தால் அறியப் பட்டுளது. அவ்வேளிருள் பரதுர்க்கமர்த்தனன் என்பான் வாதாபி வென்றவன் என்று சிறப்பிக்கப்படுகின்றான். இவனுடைய கொட்பேரன், விக்கிரமகேசரி என்பவன்; இவன் நந்திவன்மனான பல்லவமல்லன் மகனும், 880ல் பட்டம் பெற்றவனுமான தந்திவர்மன் காலத்திருந்தவன் என்பது சாஸன வாயிலாகத் தெளிவாயறியப்படு கின்றது' எனவே, 780 ல் வாழ்ந்த அவ்விக்கிரமகேசரியின் கொட்பாட்டன்-மேற்குறித்த 30-ஆண்டுத் தலைமுறைக் கணக்குப்படி--690-ல் வாழ்ந்தவன் என்பது பெறப் பரமேச்சுர வர்மனால் வாதாபி அழிபட்ட செய்திபற்றி எழுதிய கட்டுரையில்-இரண்டாமுறை அந்ந ரம் பல்லவ ராதைக்கப்பட்ட தன் உண்மையைப் பல காரணங்களால் நிரூபித தி ததல் அறியத்தக்கது. (Madras Christain College Magazine, October, 1827) | தந்திவர் மனது 16-ம் ஆட்சி வருஷத்தில் மலையடிப் பட்டிச் சாஸனம் செய்வித்த விடேல் விடுகு முத்தரையன் என்பான, கொடும்பாளூர்த் தலைவனான விக்ரமகேசரியின் சமகாலததவனனப்படுதல் அறியத்தகும், (Some Inscriptions of Muttaraiyars Journal of S. I Assosiation, July, 1911)