பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

169 திருமங்கை மன்னன் படும். படவே, 690-க்கு 14-ஆண்டுகட்கு முன் பரமேச்சுரவர்மன் காலத்து நிகழ்ந்த வாதாபி வெற்றியையே, இக்கொட்பாட்டனான பரதுர்க்க மர்த்தனன் அப்பல்லவன் சேனாதிபதியருள் ஒருவனாய்ச் சென்று பெற்றவன் என்பது நன்கறியலாம்.' நரசிம்மவர்மன் காலத்துக்கும் (உத்-640-670), தந்திவர்மன் காலத்துக்கும் (780-830) இடையே 140-ஆம் வருஷம் உள்ளமையால், தந்திவர்மன் காலத்த வனான விக்கிரமகேசரியின் கொட்பாட்டன் பெற்ற வாதாபி வெற்றி, நரசிம்மவர்மன் காலத்து நடை. பெற்றது அன்றென்றும், அவன்பேரன் பரமேச்சு வர்மன் காலத்து நிகழ்ச்சி என்றும் கொள்ளலே இயைபுடையதாம். ஆகவே, பரமேச்சுரவர்மன் 'ரணரஸிகன் நகரை அழித்தவன் என்று சாஸனங் கூறுவதினின்று, 7-ம நூற்றாண்டின் பிற்பகுதியில், இரண்டாமுறையும் வாதாபிநகரம் தாக்கியழிக்கப்பட்டது என்பது தெளி வாகின்றது. | 1. (இராசாங்கத்துச் சாஸன பரிசோதகருள் ஒருவரான நண்பர் ஸ்ரீ. ஏ. ரங்கஸ்வாமி ஸரஸ்வதி, பி, ஏ, அவர்கள். கொடும்பாளூர் வேளிரைப்பற்றி எழுதிய கட்டுரை யொன்றில்-இரண்டா முறையும் வாதாபிநகரம் பல்லவ ரால் அழிபட்டதுண்டென்றும், அது, பரமேச்சுரவர்மன் காலத்து நிகழ்ச்சி என்றும் ஆராய்ந்து கூறியிருத்தல் அறிஞர் அறியத்த க்கது. (The Vijaiyanagaran College Magazine) 2. 'பரமேச்சுரவர்மன் அழித்த 'ரணரஸிகபுரம்' என்பது வாதாபியாயின், தன் பாட்டனைப்போலத் தானும் வாதாபிகொண்டவன் என்ற சிறப்புப் பெயரை அப் பரமேச்சுரன் தரித்துக்கொள்ளத் தவறான்: ஆதலின்