பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆழ்வார்கள் காலநிலை போல-தனித்த தமிழ்த்திருப்பெயராக மாயோனொரு வற்கே தொன்றுதொட்டு வழங்கிவருதலும் கண்டு கொள்க. 1 இவ்வாறு, தமிழகந் தோன்றியகாலத்தே உடன் தோன்றித் தலைமை பெற்று நின்ற திருமால் வணக்க மும் கோயில்களும் அக்கடவுளது பேரடியார்களாற் பெருகியிருக்கவேண்டும் என்பது நாம் சொல்ல வேண்டியதில்லை. திருமால் தலங்களிலே திருவரங்கம், திருவேங்கடம், திருமாலிருஞ்சோலை, திருவெஃகா போன்றவை மிகப் பழைமை பெற்றனவாகும். திருமாலை முற்படவைத்துக் கூறும் பரிபாடலிலும், சிலப்பதிகாரம் முதலியவற்றிலும் இத்தலங்களிற் கோயில் கொண் டருளும் அர்ச்சாவதார மூர்த்திகளின் திருக்கோலங்கள் மிக அழகாகச் சிறப்பிக்கப்பட்டுள்ளன. “ நீலமேக நெடும்பொற் குன்றத்துப் பால்விரிந் தகலாது படிந்தது போல ஆயிரம் விரித்தெழு தலையுடை யருந்திறற் பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த விரிதிரைக் காவிரி வியன்பெருந் துருத்தித் திருவமர் மார்பன் கிடந்த வண்ண மும்." என்று திருவரங்கத்துத் திருமாலையும், “ வீங்குநீ ரருவி வேங்கட மென்னும் ஓங்குயர் மலயத் துச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி இருமருங் கோடிய விடைநிலைத் தானத்து மின்னுக்கொடி யுடுத்து விளங்குவிற் பூண்டு 1. திருமாலின் சகச்சிர நாமங்களுள், ப்ருஹத், மஹான் என்ற திருநாமங்கள் இப்பெயருடன் ஒப்பிடத்தக்கன.