பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/180

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

170 ஆழ்வார்கள் காலநிலை இங்ஙனம் தெளியப்பட்ட இருவேறு வாதாபிப் படையெடுப்புக்களில், திருஞானசம்பந்தர் காலத்தவரான சிறுத்தொண்ட நாயனார் அடைந்த வெற்றி, அச்சம் பந்தர் காலத்து நெல்வேலிவென்ற நெடுமாறன் பாண்டிநாடாண்டுவந்தகாலத்து (உத்-680-710) நடந்த தாயிருக்க வேண்டுமேயன்றி, அவனுக்கு முற்பட்ட தொன்றாகாது. அந்நெடுமாறனும், விக்கிரமாதித்தனை வென்ற பரமேச்சுவர்மனும் சமகாலத்தவர்கள் என்பது அறியத்தக்கது. பிறரெல்லாம் கருதியவாறு, சிறுத்தொண்டர் அடைந்த வாதாபிவெற்றி நரசிம்மவர்மன் காலத்த தாயின் - அவர்கள் கருத்துக்கேற்ப நெல்வேலிவென்ற நெடுமாறன் 640-ல் பட்டம் பெற்றவனாகவே கொள் ளினும்-- அவனுக்கும் அவன் கொட்பேரன் நெடுஞ் சடையனுக்கும் 130-வருஷகாலம் இடையிடுகின்றது. இத்துணை நீண்டகாலத்தை மூன்று பரம்பரைக்குக் கொள்வது- முன் கொடும்பாளூர்த் தலைவர்களான விக்கிரமகேசரிக்கும் அவன் கொட்பாட்டனுக்கும் போலவே - அளவுகடந்து ஏற்புடைத்தாகாமை காணலாம். அவ்விக்கிரமாதித்தன் நகரம் உறையூராதல் வேண்டும்என்று கருதினர், புரொபஸர்- தூப்ராயில் துரையவர்கள். இக்கருத்துச் சிறிதும் ஏற்புடைத்தன்று. 'வாதாபி கொண்டவன்' என்ற பெரும்பெயரைத் தன் பாட்டன் ஏற்கனவே பெற்றிருந்தமைபற்றியே, அவன் பேரன், தன் முன்னோன் பெற்ற அப்பெரும்பேரைத் தனக்கும் உரிய தாக்கி, அவன் கீர்த்திக்குத் தடைபுரிய விரும்பினனில்லை என்றே கொள்ளற்பாலது. அதனால் சில நாட்களளவில் விக்கிரமாதித்தன் தங்க நேர்ந்த அச்சோணாட்டூரை, அவனது நகரமாகக் கூறுதல் சிறிதும் அமையாதென்க,