பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

திருமங்கை மன்னன் 173 மாவருந்திண் படைமன்னை வென்றிகொள்வார் மன்னும் நாங்கை (ஷ. 4, 1, 2). “மண்ணித் தென்கரைமேல் திண்டிறலார் பயில் நாங்கை" (க்ஷ, 4, 1, 5)“துண்ணென மாற்றார்தம்மைத் தொலைத்தவர் நாங்கை' (ஷை 4, 6, 2,). “கண்ணார்முனை வென்றி கொள்வார் மன்னும் நாங்கூர் (க்ஷ, 4. 7, 1). என்று இவர் பாடுதல்' அறியத்தக்கதாம். இவற்றுள், நாங்கூரில் உள்ள வீரர், ஆற்றல்மிக்க பாண்டியனோடு வடவேந்தனொருவனைப் போரிற் புறங்காட்டி யோடச். செய்த அருஞ்செயல் பலபட வியந்து பாராட்டப்படுதல் தெரியலாம். பாண்டியனையும் வடவரசனையும் அன்னோர் வென்றவர் எனவே, அவ்விருவராலும் எதிர்க்கப்பட்ட பேரரசன் பக்கத்து நின்றவர் அவ்வீரர்கள் என்பதும், வென்றி கொள்வார் மன்னுங் நாங்கை, திண்டிறலார் பயில் நாங்கை' என இறந்தகாலத்தாலல்லாது நிகழ் 'காலத்தாற் கூறுதலின்; அன்னோரை ஆழ்வார் நேரில் நன்கறிந்தவர் என்பதும் தெளிவாகப் பெறப்படு கின்ற ன, அவ்வீரர்கள் தங்காலத்தவர் அல்லராயின், நட மாடும், என்ற பொருளில் வழங்கும் பயில் என்ற சொல் லால் ஆழ்வார் கூறார் என்க. அவ்வீரர்களுடைய நாங்கூர் சோணாட்டில் திரு மங்கை மன்னனுடைய திருநகரிக்கு அணித்தாயிருத் மல், அங்ஙனம் இவர் அறிந்து வியத்தற்கு ஏற்ற தாகின்றது.