பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

174 ஆழ்வார்கள் காலநிலை மேற் கூறியபடி, ஆழ்வார் வாழ்ந்த 7, 8-ஆம் நூற்றாண்டுகளில், சோணாட்டில் ஆதிக்கம் பெற்றிருந்த பேரரசர் பல்லவர்கீழ் ஒடுங்கிப் பேருக்கு அரசராய் இருந் தவர்களே, அதனால் அப்பல்லவரின் படையாளர்களே பாண்டிய வடவரசர்களைப் புறங்கண்ட நாங்கூர் வீரர்கள் என்பது நன்கு பெறப்படத் தடையில்லை. இங்ஙனம் வெல்லப்பட்ட பாண்டியனும் வட வேந்தனும் யாவர்? இவர்க்குப் பகைவனாய் எதிர்த்த பல்லவன் யாவன்? என்பவை . இப்போது ஆராய்ந்தறிய வேண்டுவனவாகும், திருமங்கைமன்னனது பிற்பகுதிக் காலமான எட்டா நூற்றாண்டில் வடவரசரது தென்னாட்டுப் படை யெடுப்பு இருமுறை நிகழ்ந்துள்ளன. முதலாவதுபல்லவமல்லனான நந்திவன்மனது இளமைக் காலத்தில் 741-க்கு அணித்தாகச் சாளுக்கிய வேந்தனான இரண்டாம் விக்கிரமாதித்தன் (731-746) படை யெடுத்து வந்து அப் பல்லவனை வென்று காஞ்சியைக் கைப்பற்றியதாகும்", இரண்டாவது --- 754-ல் இரட்டனான தந்தி துர்க்கன் கச்சிமா நகரிற்பிரவேசித்து அதனைத் தன்வசப்படுத் தியதாகும்", இவ்விரண்டு படையெடுப்புக்களை ஒழிய, பல்லவ பாண்டியர்களின் ஆதிக்கம் பெருகிச் சிறந்த அந்நூற் றாண்டிலே வேறுவடவேந்தர் தென்னாட்டுட் பிரவேசித் தனர் என்பதற்கு ஓர் ஆதரவும் இல்லை. இவ்விரண்டு படையெடுப்புக்களினும் சளுக்கியனும் இரட்டனும் பல்லவமல்லனை வென்றவர்கள் என்பது சாஸனங்களால் 1. Ep. ind, Vol. ix, 29. p. 205, 2, Kadaba Plates-Ep. Ind. Vol. iv, p 334.